Regulation of private schools : பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
Regulation of private schools : சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், பள்ளிகளில் அரசியல் நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுககு கட்டுப்பாடு
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 58,000 பள்ளிகள் உள்ளது. இதில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 13ஆயிரம் அளவிற்கு உள்ளது. இந்த தனியார் பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வருகிறது. அந்த நிலையில் தான் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
அந்த அரசாணையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2018 (தமிழ்நாடு சட்டம் 35/2019) பிரிவு 57 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் தமிழ்நாட்டில் திருத்தங்களைச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் படி, எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது வெளியிலோ, எந்தவொரு நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம், அறிவுறுத்தல் அல்லது எந்தவொரு வெளிப்புற நபர், சங்கம் அல்லது அமைப்பின் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்ய, நடத்த அல்லது எளிதாக்க பயன்படுத்தப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் அல்லது கருத்தியல்
- வகுப்புவாத அல்லது பிரிவினைவாத, அல்லது
- இல்லையெனில், பள்ளியின் கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாதது,
முன் அனுமதி பெற வேண்டும்
கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், இரத்த தான முகாம்கள், நினைவு விழாக்கள் அல்லது இது போன்ற செயல்பாடுகள், அவை மதச்சார்பற்றவை, அரசியல் சாராதவை, கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும், மேலும் அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் தகுதிவாய்ந்த அதிகாரி அல்லது வேறு எந்த அதிகாரத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் மாணவர்களிடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலுக்கும் அனுமதி அளிக்க கூடாது எனவும் அந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















