மேலும் அறிய

Thalapathy 67 Update: விரைவில் சந்திக்கலாம் மக்களே... விஜய்யுடன் கைகோர்க்கும் மன்சூர் அலிகான்.. நிறைவேறிய லோகேஷின் ஆசை!

Thalapathy 67 Cast Update: 1999 ஆம் ஆண்டு வெளியான  மின்சார கண்ணா படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மன்சூர் அலிகான் இணைந்து நடிக்கவுள்ளார். 

நடிகர் விஜய்யின் 67வது படத்தில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.  கொரோனா காலத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. 

View this post on Instagram
 
A post shared by Seven Screen Studio (@7_screenstudio)

இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம்  விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும்,  அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார்  தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வைரலான வீடியோ 

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர்.

அடுத்தடுத்து வெளியாகும் “தளபதி 67” அப்டேட்

இதற்கிடையில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்  இணைந்துள்ளார். இதன்மூலம் 1999 ஆம் ஆண்டு வெளியான  மின்சார கண்ணா படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மன்சூர் அலிகான் இணைந்து நடிக்கவுள்ளார். 

இதன்மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஆசை நிறைவேறியுள்ளது. அதாவது லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான “கைதி” படத்தின் கதை முதலில் மன்சூர் அலிகானுக்காக எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் ஆடிய பாடல் ஒன்றை லோகேஷ் பயன்படுத்தியிருப்பார். அந்த அளவுக்கு மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
Embed widget