Top 5 Tamil Nadu Collection Movies: தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்; குட் பேட் அக்லி லிஸ்டுலையே இல்லையா?
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களின் படங்கள் உலகளவில் அதிக வசூல் குவித்து சாதனை படைத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் அதிக வசூல் குவித்த டாப் 5 படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஜெயிலர்:
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜெயிலர். ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா மேனன், வசந்த் ரவி, சுனில் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வரையில் வசூல் குவித்தது. தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் ரூ.212 கோடி வசூல் குவித்தது. அதோடு தமிழகத்தில் அதிக வசூல் செய்த பட்ங்களின் பட்டியலில் இந்தப் படம் முதலிடம் பிடித்துள்ளது
லியோ:
இதை தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் லியோ. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மடோன்னா செபாஸ்டியன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரையில் வசூல் குவித்தது. தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் ரூ.202 கோடி வசூல் செய்தது.
பொன்னியின் செல்வன் – 1:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரவி மோகன், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த வரலாற்று காவியபடம் தான் பொன்னியின் செல்வன் 1. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.500 கோடி வரையில் வசூல் குவித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல் குவித்துள்ளது.
விக்ரம்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் பல நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் தான் விக்ரம். கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.400 கோடி வசூல் குவித்துள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.180 கோடி வசூல் குவித்துள்ளது.
அமரன்:
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் தான் அமரன். மறைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடித்திருந்தார். இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.160 கோடி வசூல் குவித்துள்ளது.
குட் பேட் அக்லி:
இந்தப் பட்டியலில் இப்போது அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படம் வெளியாகி உலகம் மழுவதும் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.123 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

