Sunny Leone | ‛கதை கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்’ - முதல் தமிழ் படத்தில் நடித்து முடித்த சன்னி லியோன்!
ஹாரர் காமெடி கதைக்களம் கொண்ட ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் , சன்னி லியோன் ராணி கதாபாத்திரத்தில் வலம் வருகிறாராம்.
சன்னி லியோனி என்ற அந்த பெயர் உலகம் முழுக்க பிரபலம். அந்த பெயரை சொன்னாலே அடெல்ட் கண்டெண்ட் பேசாதே என்பார்கள் நண்பர்கள் வட்டம் ! . ஆனால் திசை மாறி போன தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்க , மறக்க போராடும் ஒரு பாசிடிவ் வைப்தான் சன்னி லியோன். சமுதாய நற்பணிகள் , குழந்தை தத்தெடுத்து வளர்ப்பு , வெளிப்படையான பேச்சு என சன்னி லியோனின் கடந்த 10 ஆண்டுகால பயணம் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆம்..என்னுடைய கடந்த காலம் தவறகாத்தான் இருந்தது..அதிலிருந்து மீள எனக்கு உதவியாக இருங்களேன் என அவர் விடும் கோரிக்கைகள் பலரின் அன்பிற்கு பாலமாக அமைந்திருக்கிறது. தற்போது சன்னி தன்னை ஒரு வழக்கமான நடிகையாக அடையாளப்படுத்த முயற்சித்துக்க்கொண்டிருக்கிறார். பாலிவுட் பக்கம் அவ்வபோது தலைக்காட்டும் சன்னி, தனது வாழ்க்கை படத்திலேயே நடித்திருந்தார். தற்போது கோலிவுட் பக்கமும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
View this post on Instagram
இயக்குநர் யுவனின் இயக்கத்தில் (இசையமைப்பாள யுவன் சங்கர் ராஜா இல்லை ) உருவாகி வரும் திரைப்படம்தான் “ஓ மை கோஸ்ட்”. இந்த திரைப்படத்தை VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் டி. வீர சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. ஹாரர் காமெடி கதைக்களம் கொண்ட ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் , சன்னி லியோன் ராணி கதாபாத்திரத்தில் வலம் வருகிறாராம். ஆனால் அது எந்த காலத்தில் வாழ்ந்த ராணி , எந்த நாட்டு ராணி என்பதல்லாம் குறிப்பிடப்படவில்லையாம். இந்த படத்தின் கதையை சன்னி லியோனுக்கு விளக்கும் பொழுது , கதையை கேட்டு சத்தமாக சிரித்தாராம் சன்னி லியோன். பார்ப்பதற்கு மிரமிப்பாகவும், கூலாகவும் தோற்றமளிக்கக்கூடிய நடிகையை இயக்குநர் யுவன் தேடியதாகவும் அதற்கு சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்றுதான் அவரை தேர்வு செய்தோம் என்கிறார் இயக்குநர்.
View this post on Instagram
ஓ மை கடவுள் குறித்து சன்னி லியோன் கூறுகையில் “ சில படங்களின் ஸ்கிரிப்ட் நம்மல ரொம்ப சிரிக்க வைக்கும்..அந்த ஒரு காரணத்துக்காகவே நான் படத்தை ரசித்தேன் “ என கூறியுள்ளார். மேலும் படத்தில் ஒரு பகுதி உங்களை சிரிக்க வைத்தாலும் மற்றொரு பகுதி பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். மக்களை சிரிக்க வைப்பது கடினம். எனது பயிற்சியாளரின் உதவியுடன் நான் தமிழ் பேச முயற்சித்துள்ளேன். சரியான நேரத்திற்கு முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தாரம் சன்னி லியோன்.தற்போது ஓ மை கடவுள் படத்தில் சன்னி லியோன் தனக்கான போஷனை நடித்து முடித்துள்ளார். படத்தில் அவருடன் சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன் மற்றும் தங்க துரை ஆகியோர் நடித்துள்ளனர்.