எஸ்.கே 23 அப்டேட் வெளியிட நாள் குறிச்சாச்சு...செம மாஸான டைட்டில் டீசர் ரெடி
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 23 படத்தின் டைட்டில் டீசர் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிவகார்த்திகேயன்
அமரன் படத்திற்கு பின் முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , விக்ராந்த் , ருக்மினி வசந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
எஸ்.கே 23 டைட்டில்
எஸ்.கே 23 படத்துடன் சேர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிகந்தர் படத்தின் டீசர் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எஸ்.கே 23 படப்பிடிப்பு தொடர இருக்கிறது.
அதற்கு முன்பாக எஸ்.கே 23 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பாக எஸ்.கே 23 படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SK23 - Title Teaser is being planned to be out as a Pongal Special..⭐ Shoot will resume after the completion of #ARMurugadoss's another film #Sikandar ..✌️ Sikandar Teaser on Dec 27..✅ (Salman Khan's B'day)..🔥 pic.twitter.com/B0khATXf7y
— Laxmi Kanth (@iammoviebuff007) December 17, 2024
புறநாநூறு
சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். எஸ்.கே 25 படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். ஜெயம் ரவி , அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சில நாட்கள் முன்பு இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
மேலும் படிக்க : கொட்டுக்காளி மாதிரி படத்தில் சூரி இனி நடிக்க மாட்டார்...மனம் வருந்திய பி.எஸ்.வினோத்ராஜ்
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..கங்குவா பத்தி ஏன் பேசனும்?" சூடான் விஜய் சேதுபதி

