Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
தெலுங்கில் கங்குவா படத்தின் தோல்வி குறித்து கேள்வி எழுந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கோபப்பட்டு பதிலளித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூரி , மஞ்சு வாரியர் , கென் கருணாஸ் , சூர்யா சேதுபதி , கிஷோர் , சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்ஹ்துள்ளார். தமிழ் , மலையாள , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. விடுதலை படம் தெலுங்கு மொழியில் வெளியாவதை ஒட்டி அப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கங்குவா படத்தின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியபோது விஜய் சேதுபதி கோபமாக பதிலளித்தார்.
கங்குவா பற்றி விஜய் சேதுபதி
கிரேட் அந்திரா என்கிற யூடியூப் சேனலுக்கு விஜய் சேதுபதி பேட்டியளித்தார். இந்த நேர்காணலின் தொடக்கத்தில் இருந்தே தொகுப்பாளர் சர்ச்சைக்குரி கேள்விகளை கேட்டார். இன்றைய தலைமுறைக்கு சம்பந்தமே இல்லாத 1970 , 80 களில் நடக்கும் கதைகளை ஏன் எடுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். " பாகுபலி கூட புராணகாலத்து கதைதான் ஆனால் மக்கள் அதை கொண்டாடினார்கள். அதேபோல நாங்களும் ஒரு கதை சொல்ல நினைக்கிறோம். நாங்கள் எதையும் போதிக்க நினைக்கவில்லை. நாங்கள் ஒரு கதை சொல்கிறோம் அது மக்களுக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் " என விஜய் சேதுபதி தெரிவித்தார்.
" சமீப காலத்தில் ரஜின் மற்றும் கமல் படங்களைத் தவிர்த்து மற்ற பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கின்றன. ஆனால் அதே நேரம் தெலுங்கு சினிமாவில் பெரிய படங்கள் ஹிட் ஆகின்றன. சமீபத்தில் விஜயின் தி கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய படங்கள் தெலுங்கில் தோல்வியை சந்தித்தன என்று கேள்வி எழுப்பினார்
" நான் என் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரும்போது நான் ஏன் வேற ஒரு படத்தைப் பற்றி பேச வேண்டும். தமிழில் மட்டும் படங்கள் தோல்வி அடையவில்லை . எல்லா மொழிகளிலும் படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. எங்களது நோக்கம் மக்களுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். அதில் சில படங்கள் வெற்றிபெறலாம் வெற்றிபெறாமல் போகலாம். ஆனால் அது தமிழில் மட்டுமில்லை எல்லா மொழிகளிலும் நடக்கிறது. என்னுடைய படங்கள் தோல்வி அடைந்தபோதும் மக்கள் என்னை ட்ரோல் செய்தார்கள். எல்லாரும் வெற்றியடைய வேண்டும் என்று தான் படம் எடுக்கிறார்கள். சினிமா மட்டும் இல்லை எந்த துறை என்றாலும் நாம் வெற்றி அடையதான் நினைப்போம். நீங்கள் ஒரு ஹோட்டல் தொடங்கினாலும் அதில் வெற்றிபெற தான் நினைப்பார்கள். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் அதை நாங்கள் நிறைய பேரிடம் காட்டி அவர்களின் கருத்துக்களை கேட்கிறோம். சில படங்கள் மக்களுக்கு பிடிக்காமல் போகலாம் அதில் என்ன தவறு செய்திருக்கிறோம் என்று பார்த்து அதை சரி செய்து கொள்கிறோம்"என விஜய் சேதுபதி கோபமாக பதிலளித்தார்
Vijay Sethupathi response to Suriya's Kanguva and Vijay's Goat failure in Telugu states during Viduthalai Part 2 interview. pic.twitter.com/QfeF3VvA6a
— Manobala Vijayabalan (@ManobalaV) December 16, 2024
இந்த நேர்காணலுக்குப் பின் அடுத்தடுத்து விஜய் சேதுபதி பங்கேற்க இருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.