மேலும் அறிய

Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்

Senthil Balaji CBI: கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை அவரே உறுதி செய்துள்ளார்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • கரூர் கூட்ட நெரிசல் விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்.
  • சம்மன் பெற செந்தில் பாலாஜி தரப்பு மறுத்ததால், இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
  • முன்னாள் அமைச்சர், திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ தீவிர விசாரணை.
  • தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜியை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்.

Senthil Balaji CBI: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனை, திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தரப்பு வாங்க மறுத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்..

கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி,  தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுமெனவும், விசாரணையை டெல்லியில் இல்லாமல் சென்னையிலேயே நடத்த வேண்டும் என்றும் தவெக தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக சிபிஐ பரிசீலித்து வருவதாகவும், சம்மனில் குறிப்பிட்டுள்ளபடி இன்று விஜய் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, சிபிஐ அனுப்பிய சம்மன் கருதபப்டுகிறது. இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது உறுதியாகியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ?

முதலில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும்,  ஆனால் செந்தில் பாலாஜி, அவரது வீட்டில் இருப்பவர்கள் அல்லது அலுவலக ஊழியர்கள் என யாருமே அந்த சம்மனை பெறவில்லை எனவும் கூறப்பட்டது. அதேநேரம், உடனடியாக தனது வழக்கறிஞர்கள் குழுவினரை சந்தித்து செந்தில் பாலாஜி தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனக்கு சிபிஐ தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதை செந்தில் பாலாஜியே உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில்,  அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு என்ன தொடர்பு?

செந்தில் பாலாஜி கரூர் எம்.எல்.ஏ-வாக மட்டுமின்றி, ஆளுங்கட்சியான திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து, அரசு தரப்பில் முதல் நபராக மருத்துவமனைக்கு விரைந்தது செந்தில் பாலாஜி தான். அவரை விமர்சித்து பேசியபோது தான் விஜய் மீது ஒருவர் செருப்பு வீசியது தொடர்பான வீடியோவும் வைரலானது. மேலும், செந்தில் பாலாஜியின் சதி காரணமாகவே இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் தவெகவினர் அப்போதே குற்றம்சாட்டினர். ஆனால், தவெகவின் முன்னேற்பாட்டில் இருந்த குறைபாடுகள் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக, பல்வேறு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை கொண்டு செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தார். இந்நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜி..!

முன்னதாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக கடந்த 2023ம் ஆண்டு சிபிஐ தரப்பில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 471 நாட்கள் விசாரணை காவலில் சிறையில் அடைக்கப்பட்டு, நீண்ட சட்டப்போரம் மூலம் ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு விசாரணை முடியும் வரை அமைச்சராகக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவால், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜியை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனும் பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியல் அனுபவமின்றி வந்து, மக்களிடம் அரசியல் பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் - சுந்தர் சி குறித்து பிடிஆர் மறைமுக தாக்கு !
அரசியல் அனுபவமின்றி வந்து, மக்களிடம் அரசியல் பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் - சுந்தர் சி குறித்து பிடிஆர் மறைமுக தாக்கு !
பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!
பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
அதிகாரத் திமிரா? ஆணவமா? அப்பாவிகளை அடிக்கும் காவல்துறை அராஜகத்திற்கு முடிவில்லையா?
அதிகாரத் திமிரா? ஆணவமா? அப்பாவிகளை அடிக்கும் காவல்துறை அராஜகத்திற்கு முடிவில்லையா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
Embed widget