மேலும் அறிய
Vijayakanth: இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.. மனதைத் தொடும் பாடலால் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பாடகர்கள்!
Vijayakanth: நீ பொட்டுவச்ச தங்கக்குடம்...ஊருக்கு நீ மகுடம். நாங்க தொட்டு தொட்டு வணங்கி வரும் ஜோரான தங்க ரதம் என பாடல்களால் இரங்கல் தெரிவித்த பாடகர்கள்!
![Vijayakanth: இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.. மனதைத் தொடும் பாடலால் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பாடகர்கள்! Singers Anthoni and velmurugan shares last respect to DMDK Leaders Vijayakanth Vijayakanth: இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.. மனதைத் தொடும் பாடலால் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பாடகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/a146c507236ff71d54017ff8596618af1703849147187102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேப்டன் விஜயகாந்த் மறைவு
Vijayakanth: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிலைகுலைய செய்துள்ளது. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி யாராலும் வெறுக்க மற்றும் மறக்கவே முடியாதவராக திகழ்ந்தார் விஜயகாந்த். அப்படிப்பட்ட நபரின் மரணம் அனைவரையும் நீங்கா துயரில் ஆழ்த்தியுள்ளது. சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு ஏராளமான அரசியல் மற்றும் திரை பிரபலங்கள், பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 4 மணியளவில் விஜயகாந்த் உடல் பூந்தமல்லி சாலையாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த வகையில் பாடகர் அந்தோணி விஜயகாந்த் நடித்த படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ”ஏழைகள் வாழ நீ செய்த தியாகம் என்னென்ன வென்று எங்கே சொல்வேன்..அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே செல்வேன். இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் உள்ளத்தில்...அன்புக்கும் பண்புக்கும் நீ எந்தன் சொர்க்கம்...” என கண்ணீருடன் பாடலால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
”வாடிய பூமியில் கார்முகிலாய் நிம்மதியா இளைப்பாருங்க” - பாடலால் அந்தோணி இரங்கல்https://t.co/wupaoCzH82 | #VijayakanthDeath #VijayakanthRIP #விஜயகாந்த் #RIPCaptainVijayakanth #RIPVijayakanth pic.twitter.com/au46PUqv2L
— ABP Nadu (@abpnadu) December 29, 2023
இதேபோல் பாடலாசிரியர் வேல்முருகனும், நீ தங்க ரதம் என்ற பாடலை பாடி மறைந்த விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “நீ பொட்டுவச்ச தங்கக்குடம்...ஊருக்கு நீ மகுடம். நாங்க தொட்டு தொட்டு வணங்கி வரும் ஜோரான தங்க ரதம்...நீ சிங்கக்குட்டி, தங்கக்கட்டி. உன் பேர சொல்லும் பட்டித்தொட்டி” என பாடியுள்ளார்.
நீ பொட்டு வச்ச தங்கக்குடம்... பாடல் பாடி வேல்முருகன் அஞ்சலிhttps://t.co/wupaoCzH82 | #vijayakanth #premalathavijayakanth #vijayakanth #vijayakanthpassedaway #vijayakanthhealth #dmdk pic.twitter.com/U8fZmRFybT
— ABP Nadu (@abpnadu) December 29, 2023
மேலும் படிக்க: Vijayakanth - Ibrahim Rowther: நட்பின் இலக்கணம்: உளியும் சிலையுமாய் வாழ்ந்த விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் கதை!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion