Salaam Venky | சலாம் வெங்கி : ’இந்தக் கதையை சொல்லியே ஆகணும்..’ ரேவதி, கஜோலின் சொல்ல மறந்த கதை..
பாலிவுட் பிரபலம் கஜோல், கோலிவுட் ஆல்டைம் ஃபேவரைட் ரேவதி. இருவரும் இணைந்து சலாம் வெங்கி என்ற படத்தில் பணியாற்றவுள்ளனர்.
பாலிவுட் பிரபலம் கஜோல், கோலிவுட் ஆல்டைம் ஃபேவரைட் ரேவதி. இருவரும் இணைந்து சலாம் வெங்கி என்ற படத்தில் பணியாற்றவுள்ளனர். இது குறித்து கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் நானும் இயக்குநர் ரேவதியும் சலாம் வெங்கி படத்தில் இணைந்துள்ளோம் என்று கூறி படப்பூஜைக்கான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
இன்று நாங்கள் சொல்லப்பட வேண்டிய கதைக்கான புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இது கடைப்பிடிக்க வேண்டிய பாதை. இது கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. இதைப் பற்றி உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. இது ஒரு உண்மைக் கதை. #SalaamVenky என்று பதிவிட்டுள்ளார்.
Today we begin the journey of a story that needed to be told, a path that had to be taken and a life that had to be celebrated. We can’t wait to share this unbelievably true story of #SalaamVenky with you❤️#Revathy @isinghsuraj @Shra2309 @BliveProd @Take23Studios #varshakukreja pic.twitter.com/dW93VYgVOc
— Kajol (@itsKajolD) February 11, 2022
இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகை கஜோல் பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். பாலிவுட்டின் மிகவும் பிரபல தம்பதிகளான இவர்கள் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நைசா தேவ்கன், யுக் தேவ்கன் என்ற மகளும், மகனும் உள்ளனர். 1992ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான கஜோல் ஷாரூக்கான், சல்மான் கான் என்று இந்தி திரையுலகின் வெற்றிநாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.
தமிழில் அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் இவர் இணைந்து நடித்த மின்சார கனவே என்ற படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் மூலமாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் கஜோலின் தீவிர ரசிகர்களாக உருவாகினர். பின்னர், வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். கடைசியாக கஜோல் நடிப்பில் திரிபங்ரா என்ற படம் வெளியானது. தற்போது, கஜோல் நடிப்பில் தி லாஸ்ட் ஹர்ரா என்ற படம் படப்பிடிப்பில் உள்ளது.
அண்மையில் கொரோனாவில் இருந்து மீண்ட கஜோல், தற்போது ரேவதி இயக்கத்தில் நடிக்கவுள்ள சலாம் வெங்கி பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகை ரேவதி 2002-ம் ஆண்டு இயக்கிய 'மித்ர மை ஃப்ரெண்ட்' திரைப்படம் தேசிய விருது வென்றது. 2004-ம் ஆண்டு இயக்கிய 'ஃபிர் மிலேங்கே' திரைப்படமும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது சலாம் வெங்கி என்ற படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்போதே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பூஜை போட்ட கையோடு படக்குழு படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டது.