SBI Reduces Interests: SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
ரிசர்வ் வங்கி சமீத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், எதிர்பார்க்கப்பட்டபடியே, எஸ்பிஐ வங்கி தற்போது கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன் விவரங்களை தற்போது காணலாம்.

ரிசர்வ் வங்கி சமீபத்திய 0.50 சதவீத ரெப்போ விகிதத்தை குறைத்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி விகிதங்களை 0.50% வரை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வட்டி விகித மாற்றம், வீட்டு கடன்கள், MSME கடன்கள் உள்ளிட்ட ப்ளோட்டிங் வட்டி விகிதத்துடன், இணைக்கப்பட்ட கடன் அனைத்திற்கும், வரும் 15 ம் தேதி முதல் புதிய வட்டி விகிகம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய வட்டி விகிதம், EBR, RLLR உடன் இணைக்கப்பட்ட கடன்களிலும் எதிரொலிக்கும். இந்த வட்டி குறைப்பு, கடன் வாங்கியோருக்கான EMI சுமையை பெரிய அளவில் குறைக்கும்.
குறைக்கப்பட்ட EBR வட்டி
SBI வங்கி-யின் வெளிப்புற அளவுகோல் வட்டி விகிதம், அதாவது EBR எனப்படும் External Benchmark Rate, ஜூன் 15-ம் தேதி முதல் 8.65%-த்திலிருந்து 8.15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. EBR வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம்(5.5%) மற்றும் வங்கி நிர்ணயிக்கும் ஸ்ப்ரெட்(spread)(2.65%) ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும்(8.15%).
இந்த EBR வட்டி விகிதத்தை வைத்துதான், எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) கடன்கள் போன்ற அனைத்து முக்கிய கடன்களுக்குமான வட்டியை நிர்ணயம் செய்யப்படுகிறது. EBR குறைவால், கடன் வாங்குவோரின் EMI தொகையும் குறையும். SBI-யின் EBR வட்டி குறைப்பு, புதிய மற்றும் ஏற்கனவே கடன் வங்கியவர்களுக்கும் நன்மை அளிக்கும்.
வீட்டுக் கடன் வட்டி விகிதம்
எஸ்பிஐ-யின் வீட்டு கடன் வட்டி விகிதங்கள், ஒருவரின் CIBIL ஸ்கோர், கடன் தொகை, மற்றும் கால அளவை பொறுத்து மாறுபடுகின்றன. அனைத்து SBI வீட்டு கடன்களும் EBLR உடன் இணைக்கப்பட்டுள்ளன, இது தற்போது 8.15% ஆக உள்ளது. அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல், வழக்கமான வீட்டு கடன்: 7.50% முதல் 8.45% வரை. Maxgain OD (Overdraft) வீட்டு கடன்: 7.75% முதல் 8.70% வரை. டாப்-அப் வீட்டு கடன்: 8.00% முதல் 10.50% வரை வட்டி விகிதங்களாக இருக்கும்.
இதேபோல், SBI வங்கியின் MCLR அடிப்படையிலான வட்டி விகிதம் ஜூன் 14-ம் தேதி நிலவரப்படி மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம், தற்போது இருக்கும் அதே வட்டி விகிதமே தொடர உள்ளது. ஓவர்நைட் மற்றும் ஒரு மாதம்: 8.20% மூன்று மாதம்: 8.55% ஆறு மாதம்: 8.90% ஒரு வருடம்: 9.00% இரண்டு வருடம்: 9.05% மூன்று வருடம்: 9.10%-ஆக இருக்கும்.
தனிநபர் கடன்கள், வாகன கடன்கள் மற்றும் சில நிலையான வட்டி விகித கடன்களுக்கு MCLR தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால், EBR குறைந்தாலும், MCLR மாறாமல் இருப்பதால், இந்த கடன்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















