Anirudh: காவ்யா மாறனுடன் காதலா? திருமண பேச்சுவார்த்தை... வேறு வழியின்று உண்மையை உடைத்த அனிருத்!
கலாநிதி மாறனின் ஒரே மகளான, காவ்யா மாறனும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இதற்கு அனிருத் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ஒரு படத்திற்கு இசையமைக்க அதிக பச்சமாக ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூட... தான் இசையமைக்கும் படங்களுக்கு ரூ.12 கோடி மட்டுமே சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அனிருத் அவரையே மிஞ்சும் விதத்தில் சம்பளம் பெறுவதால்... தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் தான் உள்ளார்.
அனிருத் எந்த அளவுக்கு தன்னுடைய பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமோ, அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத ஒரு பிரபலம் என்றே கூறலாம். தன்னை விட 5 வயது மூத்த, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை காதலித்த நிலையில், ஒரு பெண்ணுடன் இவர் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்றும் வெளியாகி கடந்த சில வருடங்களுக்கு முன் வைரலானது. ஆனால் அனிருத் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று மறுத்தார்.

மேலும் கடந்த ஆண்டு, பாடகி ஜோனிடா காந்தியை அனிருத் காதலித்து வருவதாக சில கிசு கிசு எழுந்த போதும் அது குறித்து... அனிருத் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் அனிருத் மற்றும் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக நேற்று முதல், சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவியது.
எரியும் நெருப்பில் என்னை ஊற்றுவது போல, பயில்வான் ரங்கநாதனும் அனிருத் - காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என்றும், இரு வீட்டிலும் தற்போது இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறினார். அதே போல் ரஜினிகாந்தின் செல்ல பிள்ளை அனிருத் என்பதால், அனிருத் - காவ்யா திருமணம் குறித்து ரஜினிகாந்த் கலாநிதி மாறனை சந்தித்து பேசியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இப்படி அனிருத்தின் திருமணம் குறித்த தகவல்... சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அனிருத் இது குறித்து முதல் முறையாக பரபரப்பு விளக்கம் கொடுக்கும் விதமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "திருமணமா? தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் காவ்யா - அனிருத் திருமணம் குறித்து வெளியாகி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.





















