regina cassandra: எனக்கு முதல் லிப் கிஸ் கொடுத்தது இவர் தான்...ரெஜினா சொன்னது யாரை தெரியுமா?
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை ரெஜினா தனக்கு முதல் முறையாக லிப் கிஸ் கொடுத்த ரகசியத்தை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சூர்ப்பநகை பார்டர் உள்பட படங்களில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
அப்படியே தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ஷாகினி டாகினி என்கிற படத்தில் நடிகை நிவேதா தாமஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷனுக்காக இருவரும் பல நேர்காணல்களில் பங்கேற்றனர். அதில் ஒரு நேர்காணலில் அடல்ட் ஜோக் சொல்வதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். ரெஜினா ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று தான். இரண்டுமே 2 நிமிடங்கள் தான் என சொல்லி ரசிகர்களை அதிர வைத்தார். இதனால் பலரும் இணையத்தில் சரமாரியாக விமர்சித்தனர்.
View this post on Instagram
இந்நிலையில் மற்றொரு நேர்காணலில் தனது முதல் லிப் கிஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் ஒருமுறை ஒரு பெண் தன்னிடம் வந்து உதட்டில் முத்தமிட்டதாகவும், ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது என தெரிவித்தார். மேலும் அந்த நபர் ஒரு பெண் என்பதால் நான் அவளைப் பின் தள்ளவில்லை. இதுவே அந்த நபர் ஆணாக இருந்தால் கண்டிப்பாக முகத்தில் அறைந்திருப்பேன் என்றும் ரெஜினா தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் சிலர் ஆண் பெண் என்ற பாகுபாடு ஏன் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.