மேலும் அறிய

Rashmika Mandanna | இது ஒரு மைல்கல்.. புஷ்பா படம் பற்றி ராஷ்மிகா மந்தனா!

அல்லு அர்ஜூனுடன் தான் நடிக்கவுள்ள புஷ்பா என்ற திரைப்படம் குறித்து மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

இங்கேம் இங்கேம் காவாலே.. பாடலில் கிரங்கடித்த ராஷ்மிகா மந்தனா எத்தனை எத்தனை படங்களில் நடித்தாலும், பாடல்களில் ஜொலித்தாலும் கண்களில் கீத கோவிந்தமாக மட்டுமே விரிகிறார்.
இந்நிலையில், அல்லு அர்ஜூனுடன் தான் நடிக்கவுள்ள புஷ்பா என்ற திரைப்படம் குறித்து மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

அண்மையில் இந்தப் படத்தின் தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் வெளியிட்டார். பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா படத்தின் ராஷ்மிகா மந்தனா போஸ்டர் இணையவாசிகளை கிரங்கடித்தது. அவரை ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனையவைத்தனர். 

இந்நிலையில் தனது புஷ்பா பட போஸ்டரைக் கொண்டாடி தன்னை குளிரவைத்த ரசிகர்களுக்கு மனம் திறந்து நன்றிகளையும் பாராட்டுகளையும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி உங்களின் கருத்துகளைக் காணும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்கு உண்மையிலேயே முதலில் படபடப்பும் பயமும் இருந்தது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புஷ்பா மீது ரசிகர்களுக்கு இவ்வளவு அன்பா என வியப்பாக இருக்கிறது.

Rashmika Mandanna | இது ஒரு மைல்கல்.. புஷ்பா படம் பற்றி ராஷ்மிகா மந்தனா!

புஷ்பா திரைப்படம் தான் எனது திரைப் பயணத்தில் முதல் மல்டி லிங்குவல் (பல மொழி) திரைப்படம். இந்தத் திரைப்படம் நிச்சயமாக எனக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என நான் நம்புகிறேன். புஷ்பா படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ஸ்ரீவள்ளி. எனது ரசிகர்கள் என்னை புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாகக் காணவுள்ள நாளை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்ஷெடி மீடியா இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. இப்படத்தில் அல்லு அர்ஜூன் சந்தனமரக் கடத்தல்காரராக நடிக்கிறார். ராஷ்மிகா அவரது மனைவியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதிகளில் உள்ள சந்தனமரக் கடத்தல்காரர்களின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு, சில உண்மைச் சம்பவங்களயும் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

ராஷ்மிகா மந்தனா ஏற்கெனவே, சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு, அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை போன்ற பாலிவுட் படங்களையும் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget