மேலும் அறிய

Rocketry Release Date | மாதவனின் 'ராக்கெட்ரி' : ரீலில் வரவிருக்கும் ரியல் கதை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. படம் வெளியாகவுள்ள தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

நடிகர் மாதவன், 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், அதில் அவர் நாயகனாக  நடிக்கிறார். உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்திய விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விண்வெளி பொறியியலாளருமான நம்பி நாராயணனைப் பற்றி திரைப்படம் இது.  

இப்படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, ரஜித் கபூர், ஜெகன், ரான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியில் ஷாருக்கான் பத்திரிகையாளராக கேமியோவில் தோன்றுவார் என்றும், தமிழில் சூர்யா தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது. வெல்லம் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய பிரஜேஷ் சென் இணைந்து இப்படத்தை  இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீஜேஷ் ராய் படமாக்கியுள்ளார், எடிட்டிங் பிஜித் பாலா, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்  .


Rocketry Release Date | மாதவனின் 'ராக்கெட்ரி' : ரீலில் வரவிருக்கும் ரியல் கதை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனைவராலும் மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டிரெய்லர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.  இந்நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஒரு உண்மைக்கதையை திரையில் காணவுள்ள ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளன. இது தொடர்பாக மாதவனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த நம்பி நாராயணன்..?

1941-ஆம் ஆண்டு நெல்லை, வள்ளியூர் அருகே பிறந்தவர் நம்பி நாராயணன். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்தார். பின்னர் இஸ்ரோவில் 1966-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொ‌ண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால் நம்பியின் ஆராய்ச்சி நேர் எதிராக இருந்தது. வாயுவை  திரவமாக்கவும், அதனை எரிபொருளாக்கவும் ஆய்வு செய்தார்.  கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் மூலம் 1970ல் திரவ உந்து மோட்டாரை உருவாக்கினார். அதன்பின்னரே அவர் வாழ்வில் புயல்  வீசியது. இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக நம்பி மீது புகார் எழுந்தது. மாலத்தீவில் இருந்து இந்தியாவில் தங்கியிருந்த சில பெண்களை கேரள போலீசார் கைது செய்தனர்.  


Rocketry Release Date | மாதவனின் 'ராக்கெட்ரி' : ரீலில் வரவிருக்கும் ரியல் கதை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தியாவின் சில பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ச்சியாளர் ஒருவர் உதவியுடன் வெளிநாடுகளுக்கு விற்பதாக அப்பெண்கள் ஒப்புக்கொண்டனர். அப்போது நம்பியின் பெயரும் அடிபட்டது. ஒரு பெண்ணின் அழகில் மயங்கிய நம்பி நாட்டுக்கு எதிராக நடந்துகொண்டார் என குற்றச்சாட்டு காட்டுதீயாய் பரவியது. ஆனால் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட நம்பியோ, தான் செய்த தவறு என்னவென்று கேட்டுள்ளார். குற்றச்சாட்டே புரியவில்லை என தெரிவித்துள்ளார். அதன் பிறகே தொடங்கியது அவரின் சட்டப்போராட்டம். இல்லை என கூறிய நம்பி அதனை நிரூபிக்க நீதிமன்றப் படியேறினார். இதனையடுத்து புகார் தெரிவித்து 4 வருடங்களுக்கு பிறகு நம்பி நிரபராதி என தெரிவித்தது உச்ச நீதிமன்றம். பின்னர் தன்னை குற்றவழக்கில் சிக்கிய கேரள அரசு மீது வழக்குதொடர்ந்தார் நம்பி. இழப்பீடு கோரிக்கை விடுத்தார். அதன்படி ரூ.1 கோடியை இழப்பீடாகவும் கொடுத்தது கேரளா.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Embed widget