OTT Kids Movies List: இது குழந்தைகளுக்கான அசத்தலான டாப் 5 அனிமேட்டட் மூவீஸ் லிஸ்ட்!
ஆன்லைனில்தான் நேரத்தை செலவிட வேண்டும் என்றால், பார்த்ததையே பார்த்து ‘போர்’ அடிக்கிறதா, ஓடிடியில் வெளியாகி இருக்கும் இந்த சூப்பர் அனிமேட்டட் படங்களை ‘ட்ரை’ செய்து பாருங்கள்!
கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுமாய் நீக்கப்படுவதுமாய் மாறி மாறி நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் நேரத்தை செலவிட்ட பின்பு, யூட்யூபில் அதிக நேரத்தை செலவிடுகின்றனரா உங்களது குழந்தைகள். இதோ, அசத்தலான அனிமேட்டட் படங்களின் லிஸ்ட்!
ஆன்லைனில்தான் நேரத்தை செலவிட வேண்டும் என்றால், பார்த்ததையே பார்த்து ‘போர்’ அடிக்கிறதா, ஓடிடியில் வெளியாகி இருக்கும் இந்த சூப்பர் அனிமேட்டட் படங்களை ‘ட்ரை’ செய்து பாருங்கள்!
1. ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்; எங்கு பார்ப்பது: டிஸ்னி + ஹாட்ஸ்டார்
Here’s Tuktuk wishing you a ✨Great week✨ ahead!#RayaandtheLastDragon pic.twitter.com/gxTHIRcmP5
— Disney+HotstarPremium (@DisneyplusHSP) June 28, 2021
இந்த ஆண்டு வெளியான அனிமேட்டட் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான படம், ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன். குமந்திரா என்ற பகுதியில் டிராகன்கள் மத்தியில் நடக்கும் கதைக்களம் கொண்டதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரயாவின் சாகசமும், டிராகன்களின் விளையாடுமாக இப்படம் மேக்கிங்கில் அசத்தல். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் குட்டீஸ்களிடத்தில் செம ஹிட்!
2. க்ளாஸ்; எங்கு பார்ப்பது – நெட்ப்ளிக்ஸ்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த செரிகோ பப்ளோ என்ற இயக்குனரின் அறிமுக படமான க்ளாஸ், கிறிஸ்துமஸ் விழாவைச் சுற்றி நடக்கும் அனிமேட்டட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 92வது ஆஸ்கர் விருதுக்கு ‘சிறந்த அனிமேட்டட் திரைப்படம்’ பிரிவில் தேர்வானது. நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஆஸ்கர் விருதுக்கு தேர்வான முதல் அனிமேட்டட் படம் இது என்பது கூடுதல் தகவல்.
3. சோல்; எங்கு பார்ப்பது – டிஸ்னி + ஹாட்ஸ்டார்
Congratulations to Trent Reznor, Atticus Ross, and Jon Batiste on winning the Academy Award for Best Score for #PixarSoul! #Oscars pic.twitter.com/p0fxY8kB8P
— Soul (@PixarSoul) April 26, 2021
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் கட்டிப்போட்ட அனிமேட்டட் திரைப்படம்தான் ‘சோல்’. 93வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த அனிமேட்டட் திரைப்படத்திற்கான விருதை வென்றது. மியூசிக் டீச்சர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களின் கதைதான் சோல் திரைப்படம்.
4. ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்; எங்கு பார்ப்பது – நெட்ப்ளிக்ஸ்
ஆல்வின், சைமன், தியோடர் என மூன்று சிப்மன்க்களின் கதைதான் இந்த ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ் திரைப்படம். சுட்டிகளான இந்த சிப்மன்க்களின் அட்வென்சர் உங்களையும் குஷிப்படுத்தும்.
5. லூகா; எங்கு பார்ப்பது – டிஸ்னி + ஹாட்ஸ்டார்
சமீபத்தில் வெளியான லூகா திரைப்படமும், சோல் திரைப்படத்தை போல பெரியவர்களையும் பார்க்க தூண்டிய சூப்பர் அனிமேட்டட் திரைப்படம். இரண்டு நண்பர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத விஷயங்கள்தான் லூகா. சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகி வரும் அனிமேட்டட் திரைப்படம்.