Diwali Release Movies: தீபாவளிக்கு தியேட்டர்கள் சும்மா அதிர போகுது.! நச்சுனு களமிறங்கும் 4 ஹீரோக்களின் வெயிட்டான படங்கள் !
வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் 4 படங்கள் தீபாவளி ரேஸ்க்கு தயாராகிவிட்டன. அப்படி ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவைப் பொறுத்த வரையில் விடுமுறை நாட்கள், முக்கிய பண்டிகை நாட்களை குறி வைத்து புது படங்களின் வருகை இருக்கும். அதன்படி இந்த ஆண்டும் வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டியை முன்னிட்டு முக்கிய படங்களின் வருகை இருக்கிறது. அப்படி வெளியாகக் கூடிய படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பைசன்:
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பைசன். கபடி விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி என்பதால் அதற்கு முன்னதாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
சர்தார் 2:
இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் கார்த்தி உடன் இணைந்து மாளவிகா மோகன், ரஜிஷா விஜயன், எஸ் ஜே சூர்யா, ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா 45:
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 (தற்காலிகமான டைட்டில்) படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஆன்மீக கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.





















