Ayalaan: ரஜினிகாந்தால் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயன் படம்.. நாளை வெளியாகும் அயலான் புதிய அப்டேட்..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இப்படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பு நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயேன் நடிப்பில், இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கிய படம் அயலான். ராகுல் ப்ரீத் சிங் , இஷா கோபி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அயலான் தொடர்பாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில்:
”இந்தத் திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். சிஜிஐ காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணி புரிந்துள்ளோம். 'அயலான் ' ஒரு பான்-இந்தியா திரைப்படம். திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகளை கொண்டுள்ளதால், திரைப்படம் நிறைவாக முடிவடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.
திரைப்படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ள, வேற்றுக்கிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான் ' இருக்கும்.
இந்நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பறிய பணிக்காக நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பப்பட்டிருந்தது.
மேலும், திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுக்கிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அயலான் வரும் பொங்களுக்கு ரிலீசாகும் என்று எற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் அயலான் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் நாளை வெளியாக இருப்பது எந்த மாதிரியான அறிவிப்பு என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நடிகர் சிவகார்த்திகேயேனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனது நகைச்சுவைத் திறன், நடிப்பு திறமை, கடின உழைப்பு ஆகியவற்றால் குறுகிய காலத்தில் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். அவரின் படத்திற்கும் திரையரங்கிற்கு அதிக அளவிலான ரசிகர்கள் வருகை தருகின்றனர். இவரின் படம் குறிப்பிடத்தக்க நல்ல வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் நாளை வெளியாக உள்ள அயலான் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க
Bigg Boss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் ஆட்டம் ஆடுவாரா கமல்ஹாசன்? ஆவலுடன் கட்சிகள்!