Chandramukhi 2: சந்திரமுகி குறித்து நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ஜோதிகா.. மிரண்டுபோன ரஜினி.. என்ன நடந்தது?
சந்திரமுகி 2 படம் ரிலீசாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், இணையத்தில் நடிகை ஜோதிகாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சந்திரமுகி 2 படம் ரிலீசாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், இணையத்தில் நடிகை ஜோதிகாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பி.வாசு இயக்கத்தில் “சந்திரமுகி 2” படம் வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், ராதிகா, மகிமா நம்பியார், வடிவேலு, மனோபாலா, விக்னேஷ், பேபி மானஸ்வி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்த சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாகும். அதில் வசனங்களில் மட்டுமே சொல்லப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் கேரக்டர்களின் பின்புலம் பற்றி இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்படம் 3 நாட்களில் ரூ.17.60 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கலெக்ஷன் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
"Rajini sir is a prankster 😂😎" - Jyothika recalled an incident from #Chandramukhi during Koffee with DD. Thanks to #Chandramukhi making video, we can now see the prank for the first time 😁♥️ #Rajinikanth pic.twitter.com/UHQuEgziIn
— Musk Melon (@gunasekar_tm) September 29, 2023
அதேசமயம் இப்போது இளம் வயதில் உள்ள ரசிகர்கள் அனைவரும் சந்திரமுகி 2 ஆம் பாகம், முதல் பாகம் போல இல்லை. குறிப்பாக ஒவ்வொரு கேரக்டரும் முதல் பாகத்தை போல இல்லை என தங்கள் மனக்குமுறல்களையும் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் முதல் சந்திரமுகி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜோதிகாவின் வீடியோ ஒன்றும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதுதொடர்பாக காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “சந்திரமுகி படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் ரஜினிகாந்த் ஒரு பேப்பரை கொடுத்து அதில் சந்திரமுகி கேரக்டரில் நடித்த என்னிடம் அதன் நெகட்டிவ், பாசிட்டிவ் பாயிண்டுகளை எழுதச் சொன்னார். செட்டில் இருந்த அனைவரும் எழுதியதாகவும், நானும் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தார். நான், ஒட்டுமொத்த நெகட்டிவ் பாயிண்டுகளையும் எழுதி கொடுத்தேன். உடனே அந்த பேப்பரை கொண்டு இயக்குநர் பி.வாசுவிடம் கொடுத்தார். எப்படி நெகட்டிவ் எழுதியிருக்காங்க பாருங்க என பிராங்க் செய்தார். இதைக் கேட்டு அனைவரும் சிரித்து விட்டனர் என அதில் ஜோதிகா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் ரசிகர்களே தயாரா... இன்னும் சில மணி நேரங்களில் பிக் பாஸ் 7.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!