Bigg Boss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் ஆட்டம் ஆடுவாரா கமல்ஹாசன்? ஆவலுடன் கட்சிகள்!
தமிழ்நாட்டில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று தொடங்குகிறது. இதில், கமல்ஹாசனின் பேச்சை ரசிப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் விஜய் தொலைக்காட்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்களில் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் ரியலிட்டி ஷோ உள்ளது.
பிக்பாஸ்:
இந்த நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக பிரபல நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்ய கட்சியைத் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டது.
கமல் அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பாக பரபரப்பாக, அப்போதைய அரசுக்கு எதிராக ட்விட்டரில் இயங்கி வந்த சமயத்தில் அவர் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கினர். வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் கமல் வந்தாலும் அவரது பேச்சுக்கும், அவர் போட்டியாளர்களிடம் என்ன பேசப்போகிறார்? என்பதையும் பார்க்க ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும்.
அரசியல் பேசும் கமல்ஹாசன்:
கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பிறகு அவரது மக்கள் நீதிமய்யம் கட்சி மக்களவைத் தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. அந்த சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கமல்ஹாசன் மக்களிடம் கொண்டு சென்றார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் அரசுடன் இணக்கமான உறவுடன் செயல்பட்டு வரும் கமல்ஹாசன், வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியா கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல்:
கமல்ஹாசன் ஏற்கனவே கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் இந்த பிக்பாஸ் சீசன் முழுவதும் கமல்ஹாசனின் அரசியல் பரப்புரை நெடி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினுடன் இணக்கமான உறவில் கமல்ஹாசன் இருப்பதால், இந்த பிக்பாஸ் சீசனில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துவார் என்று அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கமல்ஹாசன் கடும் விமர்சனங்களை அப்போது கூறி வந்தார். அப்போதைய பிக்பாஸ் சீசன்களில் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான விமர்சனங்களை மறைமுகமாக பிக்பாஸ் தொடரில் கூறி வந்தார். இதனால், இனி 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் கமல்ஹாசன் வரும் எபிசோட்களில் அரசியல் வாதங்களும் இருக்க அதிகளவு வாய்ப்புகள் உண்டு.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் ரசிகர்களே தயாரா... இன்னும் ஒரு மணி நேரத்தில் பிக் பாஸ் சீசன் 7.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! ரசிகர்களே தயாராகுங்க... பிக் பாஸ் 7இல் இதெல்லாம் இருக்கும்!