Alia Bhatt : குட்டி அலியாவுக்காக காத்திருக்கும் அலியா பட்டுக்கு இதுதான் ஃபேவரெட்.. இந்த ரெசிப்பிதான் இப்போ வைரல்..
அலியாவுக்கு கருவூற்றிருக்கும் காலத்தில் திரமிஸு விரும்பிச் சாப்பிடப் பிடித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அண்மையில் நடிகர் ஆலியா பட், ரன்பீரும் தானும் தங்கள் வீட்டில் ஒரு புதிய வரவாக குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக இன்ஸ்டாவில் அறிவித்த நிலையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள ஒரு ஸ்டோரி வைரலாகி உள்ளது. புத்தகம் படித்தபடியே திரமிஸு என்னும் ஒரு வகை டெஸர்ட்டைத்தான் சாப்பிடுவதை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள அவர் ‘Tiramisu and a book such a gram scene' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதைப் பகிர்ந்ததை அடுத்து ஆலியாவுக்கு கருவுற்றிருக்கும் காலத்தில் திரமிஸு விரும்பிச் சாப்பிடப் பிடித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அலியா சாப்பிடும் திரமிஸு, காஃபித்தூள் மற்றும் பிராந்தி ஆகியவற்றைக் கொண்டுச் செய்யப்படும் ஒருவகைக் கேக்.
View this post on Instagram
முன்னதாக,
மனைவி அலியா பட் போல் தனக்கு ஹாலிவுட் ஆசையெல்லாம் இல்லை என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்களான அலியா பட்டும், ரன்பீர் கபூரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஜோடி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது. ரன்பீர் கபூரும், அலியா பட்டும் முதன்முதலில் இணைந்து நடித்த படம் பிரம்மாஸ்திரா. அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
அலியாவின் வெற்றிப் பாதை:
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் அலியா நாயகியாக அறிமுகமான முதல் பெண். அதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். அண்மையில் அலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் அலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை. இந்த நிலையில் தான், அலியா பட் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். ‘The Heart Of Stone' தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் ஆலியா பட் கால் காடோட் உடன் நடிக்கிறார். படப்பிடிப்பு லண்டனில் நடந்து வரும் நிலையில், அது குறித்து புகைப்படங்களை அலியா அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.