Alia bhatt: “தெரியாம செஞ்சிட்டேன்.. உங்களுக்கும் வேண்டாம்” - உடல் ஸ்ட்ரக்சர் குறித்து அலியா பட்
இளம் பெண்கள் உடல்வாகைப் பற்றி ரொம்பவும் கவலைப்படக் கூடாது என அட்வைஸ் கூறியுள்ளார் ஆலியா பட்.
இளம் பெண்கள் உடல்வாகைப் பற்றி ரொம்பவும் கவலைப்படக் கூடாது என அட்வைஸ் கூறியுள்ளார் ஆலியா பட்.
பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குபாய் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, இப்படத்தில் நடித்த ஆலியா பட்டுக்கு பாராட்டுகளை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. விரைவில் இத்திரைப்படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஆலியாபட் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஆலியா பட்டின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் ஆலியா பட். இந்த நிலையில் ராஜமவுலியின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் ஆலியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இளம் பெண்கள் உடல்வாகைப் பற்றி ரொம்ப கவலைப்படாதீங்க என்று ஆலியா பட் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
அண்மையில், கங்குபாய் கத்தியாவாடி நடிகை ஆலியா, பிரபல பத்திரிகையாளர் பர்கா தத்திற்கு ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், கொரோனா லாக்டவுன் வேளையில் நான் ஒரு தெரபி எடுத்துக் கொண்டேன். எனது ஆன்மாவின் சுத்திகரிப்புக்காக அந்த ஆன்லைன் தெரபியில் ஈடுபட்டேன். அப்போது எனக்கு வாழ்க்கை குறித்து நிறைய புரிதல் ஏற்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட பர்கா தத், ஒருவேளை 10 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஆலியா பட்டிடம் இதை மாற்ற வேண்டும் என்றால் எதை மாற்ற நீங்கள் விருப்பப்படுவீர்கள் என்று வினவினார்.
அதற்கு ஆலியா பட் நான் எதையுமே மாற்ற விரும்பமாட்டேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை என் வாழ்க்கையில் இருந்து மேற்கோள் காட்டி இப்போதுள்ள இளைய சமுதாயத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.
நான் எனது 18 வயது காலக்கட்டத்தில் நாம் ஷோபிஸ் துறையில் இருக்கிறோம், நம் உடல் இப்படி இருக்க வேண்டும், முடி இப்படி இருக்க வேண்டும், சருமம் இப்படி இருக்க வேண்டும் என்று என்னை நானே நிறைய வருத்திக் கொண்டேன். இப்போதுள்ள இளசுகளுக்கு நான் சொல்ல விரும்புவது உடலின் புறத்தோற்றத்துக்கான மெனக்கிடல் என்ற பெயரில் உங்களை நீங்களே ரொம்பவே வருத்திக் கொள்ளாதீர்கள் என்றார்.
தான் எப்போதும் எனது வாழ்க்கை சீக்கிரமாக ஃபாஸ்ட் ஃபார்வர்ட் ஆகிச் செல்ல வேண்டும் என்றே விரும்புவதாகக் கூறியுள்ளார் ஆலியா பட்.