ரத்தக் கொதிப்பும் ரோஜா சீரியலும்... ஜி.பி.முத்து துணையோடு களமிறங்கிய மீம்சர்கள்!

இறந்ததாக கூறப்படும் விபத்தில் தலையில் அடிபட்டு பழையதை மறக்கிறார் செண்பகம். நீண்ட ஆண்டுகளுக்குப் பின் உண்மை தெரிந்து ரோஜாவை தேடி ஓட... அனு கோஷ்டி தலையில போட... மீண்டும் அதற்கு முந்தையதை மறக்கிறார். இப்படி ரோஜாவை பார்க்க வரும் போதெல்லாம் தலையில் அடி வாங்குவதும், பழையதை மறப்பதும் தான் செண்பகத்திற்கு வேலை!

தமிழகத்தின் முன்னணி தனியார் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ரோஜா. அதிக பார்வையாளர்களை கொண்ட விளம்பரதாரர் தொடர். ரோஜானு பேரு வெச்சு...ரோ.....ஜானு இழுத்துக் கொண்டிருக்கிறது தொடர். ரோஜாவை ஏமாற்றி அவரது இடத்தில் தங்கும் பிரியா. அதே வீட்டில் அர்ஜூன் மனைவியாக ரோஜா. ரோஜா தான் உண்மையான வாரிசு என்பது தான் தொடரின் மைய கரு. இந்த கருவை வைத்து தான் ஆண்டுகள் பல கடந்து கொண்டிருக்கிறது. தற்போது இறுதிகட்டத்தை எட்டியதாக தெரிகிறது. ஆனால் முடியுமா... முடியாதா... என்பது இயக்குனருக்கே வெளிச்சம். 

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by ⭐Bangam Roja Memez🔯✨ (@bangam_roja_memez)ஒவ்வொரு நாளும் சப்பை காரணங்களை கூறி சஸ்பென்ஸ் என இழுத்து தள்ளுவதில் ரோஜாவுக்கு நிகர் ரோஜா தான். இறந்ததாக கூறும் ரோஜாவின் அம்மா செண்பகம் உயிரோடு இருக்கிறார். அவர் இறந்ததாக கூறப்படும் விபத்தில் தான், தலையில் அடிபட்டு பழையதை மறக்கிறார் செண்பகம். நீண்ட ஆண்டுகளுக்குப் பின் உண்மை தெரிந்து ரோஜாவை தேடி ஓட... அனு கோஷ்டி தலையில போட... மீண்டும் அதற்கு முந்தையதை மறக்கிறார். அப்புறம் இப்படி ரோஜாவை பார்க்க வரும் போதெல்லாம் தலையில் அடி வாங்குவதும், பழையதை மறப்பதும் தான் செண்பகத்திற்கு வேலை. இதுவரை அவர் வாங்கிய அடியை கணக்கெடுத்தால், தலையில் ஒரு பீஸ் கூட பாக்கியிருக்காது.


கலையும், காதலும் சேர்ந்த வலி சலங்கை ஒலி! 39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அழகிய படைப்பு!

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by ⭐Bangam Roja Memez🔯✨ (@bangam_roja_memez)


அவ்வளவு அடி. ஆனாலும் தலைவலி, காய்ச்சல் போல உடனே குணமாகி, பழையதை மறந்து, புதிது புதிதாக பிறக்கும் செண்பகம் தான் உண்மையான பீனிக்ஸ் பறவை. எல்லாத்தையும் மறக்கும் அவர், தங்கும் ஆஸ்பத்திரியை மட்டும் மறக்காமல் இருப்பது தான் டுவிஸ்ட்டே!

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by ⭐Bangam Roja Memez🔯✨ (@bangam_roja_memez)செண்பகம் கதை தான் இப்படி என்றால், ரோஜா கதை அதை விட மோசம்! ரோஜா தான் பேத்தினு அவங்க பாட்டிக்கு தெரிஞ்சுடும். அழுவாங்க... கதறுவாங்க... அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அம்பியா மாறி, அனு... அனு...னு போலி பேத்தி பின்னாடி போயிடுவாங்க! வழக்கம் போல ரோஜா, கண்ணுல கிளிசரின் போட்டு, மாமியாரையும், மாமனாரையும் பார்ப்பாங்க. ரோஜாவையும், கணவரையும் மாமியார் பார்ப்பாங்க. மனைவியையும், ரோஜாவையும் மாமனார் பார்ப்பாரு. அப்புறம் என்ன தொடரும்னு போட்டுடுவாங்க! இப்படி தான் ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா. 


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by ⭐Bangam Roja Memez🔯✨ (@bangam_roja_memez)உப்புக்கும் லாஜிக் இல்லாத ரோஜா சீரியல் தான் இப்போதைக்கு மீம்ஸ் ஹெட். ஜி.பி.முத்து காமெடிகளை வைத்து ரோஜா கதாபாத்திரங்களை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறது சமூக வலைதளம். ஊரடங்கில் அவனவனுக்கு ஆயிரம் டென்ஷன், போதாக்குறைக்கு இவனுங்க வேற டென்ஷன் படுத்துறாங்க... என பொங்கித் தள்ளுகிறது சீரியல் கூட்டம். 

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by ⭐Bangam Roja Memez🔯✨ (@bangam_roja_memez)இப்போ கிளைமாக்ஸ் கோர்ட் சீன் போயிட்டு இருக்கு. ரோஜா கணவன் அர்ஜூனும்-போலி அனுவின் அப்பா டைகர் மாணிக்கவும் வழக்கறிஞர்களாக கோர்ட்டில் மோதிட்டு இருக்காங்க. பொதுவாகவே ரோஜா சீரியலை சினிமா எடுப்பதை போன்று தான் நினைக்கும் அந்த படக்குழு. அவ்வப்போது டூயட், பாடல் எல்லாம் போட்டு அவங்களே மனசை தேத்திப்பாங்க. அதே மாதிரி தான் இந்த கோர்ட் சீனை காட்டிட்டு இருக்காங்க. இருக்கை நுனியில் அமர வைப்பதா நினைத்து, டிவியை ஆப் பண்ற நிலைக்கு தள்ளிட்ட இருக்காங்க என கதறுகிறது ரசிகர் கூட்டம். நேர்கொண்ட பார்வை அஜித் மாதிரி ஹீரா இமிடேட் பண்றாரு. விதி படத்தில் வர்ற வக்கீல் மாதிரி எதிர்தரப்பு வக்கில் டைகர் மாணிக்கம் பில்டப் பண்றாரு. ஆனா, ரெண்டே... ஷாட்டை ஒரு எபிசோடா போட்டா கடுப்பு வராதா பின்னே! 

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by ⭐Bangam Roja Memez🔯✨ (@bangam_roja_memez)தலைவன் ஜி.பி.முத்து தான் இதுக்கு சரியான ஆள் என அவரை தேர்வு செய்து, ஜி.பி.முத்து வசனங்களை வைத்து ரோஜாவின் அப்டேட் காட்சிகளை கலாய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு தரப்பு. இதில் அதிகம் சிக்கி சின்னபின்னமாவது டைகர் மாணிக்கமா வரும் நடிகர் ராஜேஷ் தான். அடுத்தது அனு. அப்புறம் வழக்கம் போல அர்ஜூன், ரோஜா அன் கோ எல்லாரையும் பாரபட்சம் இல்லாமல் போட்டு தாங்குறாங்க. உண்மைய சொல்லனும்னா... சீரியலை விட, மீம்ஸ் தான் ரசிக்கும் படி இருக்கு! சாக்ஷிய வேற அரெஸ்ட் பண்ணிட்டாங்க... இனி யாரு செண்பகத்தை தலையில் அடிப்பாங்க... என ஏக்கத்தில் தவிக்கிறது இன்னொரு ரசிகர் தரப்பு!


 


30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!

Tags: roja serial roja suntv suntv roja roja thodar

தொடர்புடைய செய்திகள்

”என்னைப்பற்றி கவலைப்படுவதை  மற்றவர்கள் நிறுத்துங்கள்” - வதந்திக்கு பதிலளித்தார் வனிதா

”என்னைப்பற்றி கவலைப்படுவதை  மற்றவர்கள் நிறுத்துங்கள்” - வதந்திக்கு பதிலளித்தார் வனிதா

400 குடும்பங்களுக்கு உதவிய ராணா : நெகிழ்ந்த பழங்குடிகள்..!

400 குடும்பங்களுக்கு உதவிய ராணா : நெகிழ்ந்த பழங்குடிகள்..!

"நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர் கிரேஸிமோகன்" : நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

Magamuni : மீண்டும் இணையும் மகாமுனி கூட்டணி : வில்லன் அவதாரத்தில் ஆர்யா ! நியூ அப்டேட்ஸ் !

Magamuni : மீண்டும் இணையும் மகாமுனி கூட்டணி : வில்லன் அவதாரத்தில் ஆர்யா ! நியூ அப்டேட்ஸ் !

மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!

மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :டெல்லியில் இன்று 305 நபர்களுக்கு கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News :டெல்லியில் இன்று 305 நபர்களுக்கு கொரோனா

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

கோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்

கோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!

'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!