மேலும் அறிய

Leo Second Single: ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளயா.. லியோ இரண்டாவது பாடல் என்ன சாதனை தெரியுமா?

லியோ திரைப்படத்தின் ‘Bad Ass’ பாடல் வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளாக புதிய சாதனை படைத்துள்ளது.

லியோ திரைப்படத்தின் Bad Ass பாடல் நேற்று வெளியாகிய நிலையில் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடித்து உருவாகி இருக்கும் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைத்து 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

லியோ ஆடியோ லாஞ்ச்

லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெறும் எனக் கூறப்பட்டது. இப்படியான நிலையில் அதிகப்படியான கூட்டம் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சியை ரத்து செய்தது படக்குழு.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் படக்குழு வெளியிட்ட தகவலுக்கு பிறகு பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். ஒவ்வொரு படத்தின் இசைவெளியீட்டு  நிகழ்ச்சியின் போதும் மேடையில் விஜய் பேசும் கருத்துக்களை கேட்க ரசிகர்கள் தவமாய் காத்திருப்பார்கள்.

விரைவில் அரசியலில் நடிகர் விஜய் களமிறங்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், லியோ படத்தின் இசைவெளியீட்டில் தனது அரசியல் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்களே காரணம் என்று ஒரு பக்கம் விவாதம் கிளம்பியது.

இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் எந்த விதமான அரசியல் காரணங்களும் இல்லை என்று படக்குழு தெரிவித்தது. மேலும்  ரசிகர்களுக்குத் தேவையான அப்டேட்களை தொடர்ச்சியாக படக்குழு வழங்க இருப்பதாகத் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று லியோ படத்தின் Bad Ass பாடல் வெளியிடப்பட்டது.

பார்வையாளர்களை குவிக்கும் Bad Ass

அனைத்து பெரிய நடிகர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் மிரட்டலான மாஸ் பாடல்களை வழங்கி வரும் அனிருத் குரலில் உருவாகி உள்ளது Bad Ass பாடல். முதன்முறை கேட்கும்போது கொஞ்சம் சிங்க் ஆக முடியவில்லை என்றாலும், கேட்க கேட்க பிடிப்பதே அனிருத் ரக பாடல்களின் சிறப்பாக இருக்கிறது. இப்படியான சூழலில் பாடல் வெளியாகி 24 மணி நேரம் கூட இன்னும் ஆகாத நிலையில், 8 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ளது இந்தப் பாடல். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget