Yash Temple Visit: இன்னும் 2 நாள்ல கே.ஜி.எஃப் 2 ரிலீஸ்! நரசிம்மர் கோயிலில் யஷ்.. வைரலாகும் போட்டோஸ்..!
நடிகர் யஷ் விசாகப்பட்டினம் சிம்மாச்சலம் மலையில் உள்ள வராக லட்சுமி நரசிம்மா் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலம் மலையில் உள்ள வராக லட்சுமி நரசிம்மா் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். மாஸான ஆக்சன் காட்சிகள் தெறிக்கும் வசனங்கள், அம்மா செண்டிமெண்டுடன் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்தப்படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போதிலிருந்தே கே.ஜி.எஃப் 2 படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்தப்படத்தில் ய்ஷ்ஷூடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
View this post on Instagram
கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கலை எதிர்கொண்ட படக்குழு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு நடித்தி படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதனையடுத்து படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இதுவும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் அசுர வேகத்தில் நடந்து வரும் நிலையில், முதல் நாள் படத்திற்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து வருகின்றன.