Kannane Kanne Serial : கடைக்குள்ளே கண்ணாமூச்சி..! கவுதம் - மீரா- பிரீத்திக்கு என்ன ஆச்சு.?
கண்ணானே கண்ணே தொடரில் இன்று கவுதம் - மீரா இருவரும் இணைந்து பிரீத்தியின் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டது இந்த தொடரின் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் அதிகளவு ரசிகர்களை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருவது கண்ணாணே கண்ணே. தந்தை – மகள் பாசப்பிணைப்பை கருவாக கொண்ட இந்த கதையின் இன்றைய எபிசோடு முழுவதும் பரபரப்பை கூட்டும் எபிசோடாக காட்டப்பட்டது.
ஏற்கனவே, வேலை பார்க்கும் கடைக்கு ஒருநாள் விடுமுறை எடுத்ததால் மேனேஜரிடம் திட்டு வாங்கும் கௌதம், அதே கடைக்கு வரும் பிரீத்தி மற்றும் மீரா கண்களில் படாமல் அங்குமிங்கும் ஓடுவதும், மீரா தனது தங்கையின் கண்களில் படாமல் ஓடுவதுமாக சூப்பர் மார்க்கெட்டின் உள்ளேயே சூப்பராக இன்றைய எபிசோடை இயக்குனர் முடித்துவிட்டார்.
கடையில் சாதாரண பணியாளராக முன்னாள் கோடீஸ்வரர் கவுதம், அதே கடைக்கு கவுதமின் கஷ்டமான நிலை தெரியாமலே இருக்கும் அவரது செல்ல மகள் பிரீத்தி பொருட்கள் வாங்க வருகிறார். தனது மகள் என்றே தெரியாமல் அவரை கடந்து செல்வதும், அருகருகே இருந்தும் தந்தையின் குரல் கேட்டும் யாரென்று கவனிக்காமல் பிரீத்தி நிற்பதும் நம்மை இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று யோசிக்க வைச்சாலும், அடுத்தடுத்த எபிசோடை ஓட்டுவதற்கு நாமளும் இதை நம்பித்தான் ஆக வேண்டும்.
பின்னர், பிரீத்திக்கு பயந்து பிரீத்தியையே இடித்துவிட்டு ஓடுவது, பின்னர் பிரீத்தியிடம் இருந்து கவுதமை அந்த வாட்ச்மேன் தாத்தா காப்பாற்றுவது என்று நகர்ந்தது. மீண்டும் அதே கடைக்கு பொருட்கள் வாங்க மூத்த மகள் மீரா வருவது, அவர் தனது தங்கையிடம் மறைமுக பாசப்போராட்டம் நடத்தி அங்கிருந்து மறைவது தனது இரு மகள்கள் கண்ணிலும் படாமல் கவுதம் தான் வேலை பார்க்கும் கடைக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்.
இந்த மூன்று பேரை வைத்தும், அந்த மூன்று ரேக்குகளை காட்டியுமே இன்றைய எபிசோடை இயக்குனர் சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார். தன்னுடைய நிலைமையை தன் மகள்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக கவுதம் படும் நிலை நம்மையும் சற்று இரக்கத்தான் பட வைக்கிறது. கவுதமின் நிலை பிரீத்திக்கு எப்போதுதான் தெரிய வரும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க : Biggboss Ultimate : பாலாவிடம் நோஸ் கட் வாங்கிய சுரேஷ் தாத்தா...! வைரலாகும் புதிய ப்ரோமோ..!
மேலும் படிக்க : பெண்கள் ஒற்றுமையா இருந்தாங்கன்னா.. இது நடக்கும்.. காஜல் சொன்ன மகளிர் தின பொன்மொழி..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்