Biggboss Ultimate : பாலாவிடம் நோஸ் கட் வாங்கிய சுரேஷ் தாத்தா...! வைரலாகும் புதிய ப்ரோமோ..!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில் பாலாவிடம் சுரேஷ் தாத்தா பல்பு வாங்கும் வீடியோ செம வைரலாகி வருகிறது.
![Biggboss Ultimate : பாலாவிடம் நோஸ் கட் வாங்கிய சுரேஷ் தாத்தா...! வைரலாகும் புதிய ப்ரோமோ..! bigboss ultimate new promo viral suresh argue with bala in general knowledge task Biggboss Ultimate : பாலாவிடம் நோஸ் கட் வாங்கிய சுரேஷ் தாத்தா...! வைரலாகும் புதிய ப்ரோமோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/7d89e655934430344414c0df800fe8fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கற்றுள்ள போட்டியாளர்களின் அறிவுத்திறனை சோதிப்பதற்காக பிக்பாஸ் ஒரு டாஸ்க் அளித்தது.
இந்த டாஸ்க்கில் தாமரையும், சுரேஷ் தாத்தாவும் ஒரு அணியாக இருந்தனர், இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பாலா வேறொரு அணியில் இருந்தார். அப்போது, இந்தியாவின் முதல் ஜெனரல் கவர்னர் யார் என்று டாஸ்கில் கேட்கப்பட்டது. அதற்கு, பாலா ஜெனரல் மவுண்ட் பேட்டன் என்றார்.
ஆனால், சுரேஷ் தாத்தா ஜெனரல் மவுண்ட் பேட்டன் என்பது தவறான பதில் என்று கூறினார். ஆனால், பாலா இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் அவர் தனது ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் என்றும், அதனால் ஜெனரல் மவுண்ட் பேட்டன் என்றுதான் உறுதியாக கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியது.
வாக்குவாதத்தின் இறுதியில் பிக்பாசிடமே பதில் கேட்கப்பட்டது. அப்போது, லார்ட் ஜெனரல் மவுண்ட் பேட்டன் என்பது மிகச்சரியான பதில் என்று கூறப்பட்டது. இதனால், பாலா மிகுந்த உற்சாகமடைந்தார். இதற்கான ப்ரோமாவை பிக்பாஸ் அல்டிமேட் வெளியிட்டுள்ளது.
அறிவுக்கொழுந்து என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு ஜோடி போட்டியாளர்களும் பிற ஜோடி போட்டியாளர்களிடம் தங்களுக்கு தெரிந்த பொது அறிவுக் கேள்வியை கேட்க வேண்டும். அதற்காக அந்தந்த ஜோடி போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள தங்க நாணயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விதிமுறையாக கூறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4-ல் ஆரியுடன் டைட்டிலை வெல்வதற்காக கடைசி வரை போராடியவர் பாலா. அப்போது அவர் அந்த சீசனில் ஆரியிடம் தனது டைட்டிலை பறிகொடுத்தார். இருப்பினும், அந்த சீசனில் பாலாவிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தற்போது, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது முதலே பாலா மீதே அனைவரது எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
பாலாவும் கடந்த சீசன் 4-ஐப் போல இல்லாமல் இந்த முறை மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவுமே இந்த முறை நடந்து கொள்கிறார். அவரத சாமர்த்திய தனத்தால் பாலாவின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. அதேசமயம் ஏற்கனவே சுரேஷ்தாத்தாவிற்கு ஏராளமான மீம்ஸ்கள் போடப்பட்டு வரும். இந்த நிலையில், இந்த புதிய ப்ரோமோவில் அவர் பாலாவிடம் மொக்கை வாங்கும் இந்த காட்சிகளை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், ட்ரோல்களும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)