Chandramukhi 2: தோம் தோம் தோம்... வெளியானது சந்திரமுகி 2-ன் கங்கனா ரனாவத் போஸ்டர்!
சந்திரமுகி -2 படத்தில் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
சந்திரமுகி-2 படத்தில், சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சந்திரமுகி' திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் தோற்றம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றம் இன்று வெளியாகி இருக்கின்றது. சந்திரமுகி-2 படத்தை செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குளில் வெளியாகிறது.
View this post on Instagram
2005-ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. காமெடி, த்ரில்லர் என மிரட்டலாக உருவான இப்படம் செம ஹிட் ஆனாது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 வெளியாக உள்ள நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க,
Jailer: இணையத்தை தெறிக்க விடும் காவாலயா படல்... 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை...