மேலும் அறிய

Vikram Record : "There Lived a Ghost" : ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடியா? : விக்ரமின் மாஸ் சாதனை..

3 ஜூன் 2022 அன்று விக்ரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் புக்கிங் அண்மையில் தொடங்கியது.

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் 3 ஜூன் 2022 அன்று விக்ரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் புக்கிங் அண்மையில் தொடங்கியது. இதற்கிடையே ரிலிஸாவதற்கு முன்பே இந்தத் திரைப்படம் ரூ 200 கோடி ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு இதுவே முதன்முறை. 

முன்னதாக, அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!!  என்று ராஜ்கமல் ஃபில்ம்ஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டால் விக்ரம் படம் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் இன்ஸ்டின்க்ட்!!!  என்று போலீஸ் உள்ளணர்வு பற்றி கமல் பேசிய டயலாக் இப்போது வரை பிரபல்யம். அதுபோல் ஃபக்த் ஃபாசில் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!!  மூலம் ட்ரெண்ட் செட் செய்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி. ஃபகத் ஃபாசில் நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தை ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் ஃபக்த் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படக்குழு சற்றுமுன் வெளியிட்ட ட்வீட்டில் அமரின் கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாக ஒற்றை வரியில் வெளிப்படுத்தியுள்ளது. அதில், அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!!  (கொலையுணர்வை) காண தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இந்த ட்வீட் இன்னும் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது

விக்ரம் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஆம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் சூர்யாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.  

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என பெரிய ஸ்டார் காஸ்ட் இருப்பதால் அனைவரின் ரசிகர்களையும் தியேட்டருக்கு படம் இழுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விக்ரம் திரைப்படம் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடலை வைத்து இளைஞர்கள் டேன்ஸ் கவர் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 'போர் கொண்ட சிங்கம்' பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget