புடவைதான் பிடிக்குமா? காஜல் சொன்ன ட்ரெண்டி ஸ்டேட்மெண்ட்ஸ் இது..!
உண்மையிலேயே மற்ற எல்லா ஆடைகளைவிட சேலையில்தான் பெண்கள் கூடுதல் கவர்ச்சியாக இருப்பார்கள் என்பது பரவலான கருத்து. அதுவும் காஜல் அகர்வாலின் சேலை ஃபோட்டோ ஷூட் என்றால் கேட்கவா வேண்டும்.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, சேலையிலே வீடு கட்டவா, அடடா முந்தானை சிறையானது.. என்று சேலையைக் கொண்டாடும் தமிழ்ப் பாடல்கள் ஏராளம். உண்மையிலேயே மற்ற எல்லா ஆடைகளைவிட சேலையில்தான் பெண்கள் கூடுதல் கவர்ச்சியாக இருப்பார்கள் என்பது பரவலான கருத்து. அதுவும் காஜல் அகர்வாலின் சேலை ஃபோட்டோ ஷூட் என்றால் கேட்கவா வேண்டும்.
காஜலும் சில கலர்ஃபுல் ட்ரெண்டிங் சேலைகளும்..
மீனாக்ஷி சபர்வால் டிசைனர் சேலைகளைக் கட்டி தீபாவளிக்காகவே காஜல் அகர்வால் இந்த பிரத்யேக போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.
பட்டுவண்ண ரோஜாவாம் என்று பாடத்தோன்றும் அளவுக்கு லாவண்டர் கலர் பட்டுச் சேலையில் பளிச்சிடுகிறார். அதற்கு ஊதா நிறச் சட்டை கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே..
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
என்று காஜலைப் பார்த்து பாடாமல் போக முடியாது. தங்கத் தாரகை போல் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கிறார்.
ட்ரெண்டி ப்யூட்டி:
பாரம்பரியம் மட்டுமல்ல நவநாகரிகமும் காஜலுக்கு அழகுதான். இக்காலத்துக்கு ஏற்ற ப்ரிண்டட் சேலையில் ஸ்ட்ராப் ப்ளவுஸ் அணிந்து கூல் பேபியாக காட்சியளிக்கிறார். சாம்பல் நிறச் சேலை கூட காஜல் கட்ட கண்களைக் கவர்கிறது.
கட்டோடு குழல் ஆட.. ஆட.
சேலையுடன் சிகை அலங்காரமும் பொருத்தமாக அமைந்துவிட்டால் பெண்ணின் அழகு கண்ணைப் பறிகும். இந்த கருப்பு நிற ஆடையில் காஜல் அகர்வால் ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் காஜல் ஹாட்டாக இருக்கிறார்.
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு போல செக்கச் சிவந்த வானமாக சிவப்பு நிற உடையில் காட்சியளிக்கிறார் காஜல் அகர்வால்.
மீண்டும் இந்தப் பாடல் வரியைப் பாட "கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்குபுத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம் எல்லா சிவப்பும் உந்தன் கோபம்" உங்கள் மனம் அலைபாயாமல் இருக்காது.
ஜன்னல் வைத்த ஜாக்கெட்..
ஜன்னல் வைத்த ஜாக்கெட் எல்லாம் பழசு. சேலையே காத்துவாங்கும் அளவுக்கு நெட்டட் சேலையாக இருப்பது தான் புதுசு. கூந்தல் தோளில் வழிய மஞ்சள் நிற நெட்டட் சேலையில் கண்களைக் கவர்கிறார் காஜல் அகர்வால்.
லேசா.. லேசா.
பண்டிகையென்றால் பளிச் கலரில் தான் சேலை கட்ட வேண்டுமா என்ன? வெளிர் நீலமும், சற்றே அடர் பிங்கில் ஜாக்கெட்டும் அணிந்து பாருங்கள். காண்போரின் கண்களுக்கு இதமாக இருப்பீர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது காஜலின் இந்த உடை.
பட்டுப் பூவே..
பட்டுப் பூவே தொட்டுப் பேசு என்று எழில் கொஞ்சும் அழகை காஜலுக்குக் கொடுத்துள்ளது பட்டுச் சேலை. அதற்கு ஏற்றார்போல் அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் இன்னும் சிறப்பு.
அட ப்ளவுஸ் தாங்க ஹைலைட்..
சேலையை ஹைலைட்டாக்குவது ஒரு ஸ்டைல் என்றால் ஃப்ரில் வைத்த சேலைக்கு வேலைப்பாடான ப்ளவுஸ் இன்னொரு ரக ட்ரெண்ட். இந்த சேலையைப் பாருங்க நீங்களே சொல்வீங்க.
முன்பே வா என் அன்பே வா.
விதவிதமாக ரகரகமாக சேலை கட்டினாலும் ஒரு ட்ரெண்டி குர்தா செட் அணிந்த காஜலைப் பார்த்து யார் இந்த முயல் குட்டி என்று பாடுங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கு.