மேலும் அறிய

HBD Vairamuthu: கரிசல்காட்டு கவியரசன் வைரமுத்து பிறந்தநாள் இன்று!

HBD Vairamuthu: பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் சாகித்ய அகாதமி விருதுகளை வென்று குவித்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் இன்று!

1953-ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் தேனி மாவட்டம் வடுகப்பட்டி எனும் கரிசல்காட்டில் கண்டெடுத்த முத்து தான் இன்றைய நம் கவிப்பேரரசு வைரமுத்து. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீதிருந்த அதீத அன்பின் காரணமாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். 

HBD Vairamuthu: கரிசல்காட்டு கவியரசன் வைரமுத்து பிறந்தநாள் இன்று!

இலக்கியம் ஈன்றெடுத்த தவப்புதல்வன் வைரமுத்து:

சிறு வயது முதலே தமிழ் இலக்கியத்தில் திழைத்திருந்த வைரமுத்து எழுதிய இலக்கியங்கள் அவருக்கு இலக்கிய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்று கொடுத்தது. வைரமுத்துவின் இலக்கிய படைப்புகளினுள் சிறந்தது இவரது இரட்டை காப்பியங்களான கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும் தான். கள்ளிக்காட்டு இதிகாசம் இவருக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்றுத் தந்தது. அதுமட்டுமின்றி அந்நூல் 22 மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர வைரமுத்துவின் பேனா, கவிதை தொகுப்புகள், நாவல்கள் என 37 நூல்களை எழுதி தள்ளியுள்ளது.

திரையுலகில் வைரமுத்துவின் படைப்புகள்: 

இலக்கிய உலகில் மட்டுமல்லாம் திரையுலகிலும் கால் பதிக்க வைரமுத்து சற்றும் யோசிக்கவில்லை. 1980 ஆம் ஆண்டு, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தார் வைரமுத்து. அந்த பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவே வைரமுத்துவின் முதல் திரைவரிகளே பட்டித்தொட்டி எங்கும் ஒளித்தது. அதன் பிறகு அவரது பேனாவில் திரைப்பாடல் எழுதுவதற்கு மை தீர்ந்து போகவேயில்லை.HBD Vairamuthu: கரிசல்காட்டு கவியரசன் வைரமுத்து பிறந்தநாள் இன்று!

நாட்படு தேறல்: 

இளம் தமிழ் நெஞ்சங்களில் பழந்தமிழை அதன் செம்மை மாறாமல் பாய்ச்சும் பொருட்டு வைரமுத்து எடுத்து வைத்துள்ள நவீன கால முயற்சி தான் நாட்படு தேறல். இது 100 பாடல்கள் கொண்ட தொகுப்பாக உருவாகி வருகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு சிறுகதை சொல்லும். இந்த 100 பாடல்களில் 100 இயக்குநர்கள், 100 இசையமைப்பாளர்கள் மற்றும் 100 பாடகர்களுடன் சேர்ந்து பாடல்களை வடிக்கிறார் வடுகப்பட்டி கவி வைரமுத்து.

வெற்றிகளும் விருதுகளும்:

 45 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து, சிறந்த பாடலுக்கான 7 தேசிய விருதுகளை வென்று இதுவரை இந்திய திரையுலகில் எந்த ஒரு பாடலாசிரியரும் அடையாத சிறப்பை பெற்றுள்ளார். இவை தவிர பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாதமி விருது என அனைத்து விருதுகளும் அவரது பேனாவிற்கு அடிமை ஆகின.

இவ்வாறு சென்ற இடமெல்லாம் தன் கள்ளிக்காட்டு வாடையுடன் சேர்த்து இலக்கியத்தையும் பாய்ச்சி செல்லும் அமுத விரலர், இந்நூற்றாண்டின் சிறந்த இலக்கிய ஆளுமை கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழன்பு நிறைந்த வாழ்த்துகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget