மேலும் அறிய

Goundamani comeback: தலைவா வா வா.. மீண்டும் ஹீரோவாக கம்பேக்.. கவுண்டமணி ரசிகர்கள் உற்சாகம்!

இறுதியாக நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் காமெடி மற்றும் முக்கியப் பாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, ‘49 - 0’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென பிரத்யேக இடம்பிடித்து 70கள் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்களின் வயிறுகளை பதம் பார்த்து நகைச்சுவை ஜாம்பவனாக வலம் வருபவர் நடிகர் கவுண்டமணி.

குறிப்பாக 80கள், 90களில் செந்திலுடன் இணைந்து காமெடி விருந்து படைத்த நடிகர் கவுண்டமணியின் நக்கல்கள் மற்றும் ஒன்லைனர்களை இன்றைய மீம் உலகினரும் உபயோகித்து லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.

இறுதியாக நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் காமெடி மற்றும் முக்கியப் பாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, ‘49 - 0’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

முன்னதாக தீவிர கவுண்டமணி ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது ’மாவீரன்’ படத்தில் அவரை நடிக்க கடுமையாக முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இயக்குநர் செல்வ அன்பரசனின் ’பழனிச்சாமி வாத்தியார்’ எனும் படத்தில் மீண்டும் ஹீரோவாக கவுண்டமணி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவுண்டமணி அவரது அரசியல் கேலி, சாதிய எதிர்ப்பு கருத்துகளுக்காக கோலிவுட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிலையில், உருவக்கேலி செய்வது, மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது உள்ளிட்ட விஷயங்களுக்காக இன்றைய இணைய உலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அனைத்து தரப்பினருக்குமான நகைச்சுவையுடன் இப்படத்தில் கவுண்டமணி கம்பேக் கொடுப்பாரா என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முன்னதாக 90களின் பிரபல நடிகை சுகன்யா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கவுண்டமணி பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அப்போது சின்னக் கவுண்டர் படம் குறித்துப் பேசிய சுகன்யா, ”கவுண்டமணி சாரும் செந்தில் சாரும் ஸ்பாட்டிற்கு வந்தாலே சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அங்கு கூடி இருக்கும் மக்கள் அவர்களுடைய ஏதோ ஒரு காமெடியை சொல்லி சொல்லி சிரித்து கொண்டு இருப்பார்கள். கவுண்டமணி சார் செந்திலை படங்களில் தான் திட்டுவார், நேர்ல எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடிய நபர் அவர்.

மிகவும் மரியாதையானவர், அதற்கு முன்னதாகவே அவருடன் ஞானப்பழம் என்ற பாக்யராஜ் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பேன். அப்போதிலிருந்தே நல்ல நட்பு எங்களுக்குள் உண்டு." எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget