Jailer: “ஜெயிலர் பாக்கப்போற உங்க நிலைமையை நினைச்சா..” ப்ளூசட்டை மாறன் விமர்சனம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” படத்தை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து விமர்சனம் செய்துள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” படத்தை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து விமர்சனம் செய்துள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெரும் வரவேற்பை பெற்ற ஜெயிலர் படம்
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் நேற்று உலகமெங்கும் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் “ஜெயிலர்” படத்தை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
அதில் “இந்த படம் சீரியஸான ஆக்ஷன் கதையா இருந்தாலும், டார்க் காமெடி படம் தான் சொல்லியிருந்தாங்க. வழக்கமா டார்க் காமெடி படமென்றால் படத்துல இருக்க கேரக்டர் எல்லாம் சீரியஸா இருப்பாங்க. படம் பார்க்குற நமக்கு காமெடியா இருக்கும். ஆனால் இங்க படத்துல வர்றவங்க எல்லாம் காமெடி பண்றாங்க. படம் பார்க்குற நாம சீரியஸா இருக்கோம். அந்த அளவுக்கு காமெடி பண்ணி வச்சிருக்காங்க.
கதை நேர்கோட்டில் போகாம, எங்கெல்லாமோ போறாங்க. கதையில ட்விஸ்ட் இருக்குற இடத்துல இருந்தாச்சு படத்தை எடுத்துட்டு போயிருக்கலாம். ஆனால் அதுக்குள்ள ஆடியன்ஸ் அசதி ஆகி கோமா நிலைக்கு போயிடுராங்க. இப்படி ஜெயிலர் படம் இலக்கில்லாம போய் முட்டு சந்துல நிற்க காரணம் பேன் இந்தியா படமா எடுக்குறேன்னு முயற்சி பண்ணுனது தான். பாகுபலி, புஷ்பா, கேஜிஎப் போன்ற பேன் இந்தியா படங்கள், படத்தின் அடிப்படை மொழி எதுவோ அதுக்கு நியாயம் சேர்த்துருப்பாங்க. ஆனால் ஜெயிலரில் ஹிந்திக்கு ஜாக்கி ஷெராஃப், கன்னடத்துக்கு சிவராஜ்குமார், மலையாளத்துக்கு மோகன்லாலுன்னு வர்றாங்க.
டப்பிங் படமா மாற வேண்டியது
அவங்க வர்றப்ப, அந்தந்த மாநில மொழி பேசுறாங்க. படம் பார்க்குற நமக்கு டப்பிங் படம் பார்க்குற மாதிரி இருக்கு. நல்லவேளையா 2 வரிக்கு மேல வசனம் பேசுறாங்க. இல்லைன்னா முழுக்க முழுக்க டப்பிங் படமா மாறியிருக்கும். இந்த படத்துல உதவி கமிஷனர் காணாம போறாரு. அது அந்த மாநிலமே ஆடிப்போற விஷயம் தானே. ரொம்ப ஈஸியா கடந்து போறாங்க. அதைவிட அந்த உதவி கமிஷனரோட வீட்டுல இருக்குறவங்க பெரிய அளவுல எடுத்துக்கல.
படம் முழுக்க வசனம் மட்டும் தான் பேசுறாங்க. காட்சிகளாக விவரிக்கல. சினிமாவுக்கு உண்டான நியாயமான செலவு பண்ணல. படத்துல ஆறுதல் ஆன விஷயம் அனிருத் டான்ஸ், தமன்னாவின் டான்ஸ் தான். பின்னணி இசை பார்த்த படம் தனியா போகுது, மியூசிக் தனியா போகுது. தமன்னா பாட்ட கூட முழுசா போடாம பகுதி பகுதி போட்டுருக்காங்க. வயசானவங்க, தன்னை விட இளம் வயதுக்காரங்க தன்னை மதிக்கலன்னா புலம்புவாங்க. அந்த மாதிரி ‘தலைவரு நிரந்தரம்’ பாட்டை எழுதி வச்சிருக்காங்க.
ரஜினியின் வீழ்ச்சி
மாற்றம் ஒன்று தான் மாறாதது என ரஜினிக்கு தெரியல போல. அவரு இந்த உயரத்துக்கு போனதுக்கு, வீழ்ந்ததுக்கும் காரணம் ரசிகர்கள் தான். இந்த சூழலை உருவாக்குனது ரஜினி தான். (தூத்துக்குடி ஸ்டெர்லைட் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை சுட்டிக்காட்டுகிறார்). வேண்டா வெறுப்பா பிள்ளையை பெற்று காண்டாமிருகம் என பெயர் வைத்தார்கள் என சொல்வார்கள். அந்த மாதிரி தான் இந்த படம் இருக்குது.
இயக்குநர் நினைச்ச ஹீரோ கிடைக்காம, கிடைச்ச ஹீரோ வச்சி படம் எடுத்துருக்காரு. நினைச்ச கதை கிடைக்காம, கிடைச்ச கதையை வச்சி படம் எடுத்துருக்காங்க. நினைச்ச படம் வரல, கிடைச்ச படம் தியேட்டர்ல வந்துருக்கு. இந்த படம் பார்க்கப்போற உங்க நிலைமையை நினைச்சி கூட பார்க்க முடியல” என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.