Ayalaan : அதே இரண்டு பேர்..அதே ஏலியன்...எல்லாமே அப்படியே இருக்கு... இதுதான் அயலான் படத்தின் கதையா..
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் கதை ஹாலிவுட்டில் வெளியான பால் படத்தைப் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தின் கதை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அயலான்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜனவர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அயலான் படம்.
பூமிக்கு வந்த ஏலியன்
அயலான் படத்தி ட்ரெய்லர் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் அதனுடன் கதாநாயகன் சிவகார்த்திகேயன் செய்யும் கலாட்டா என காமெடி கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது என்று எதிர்பார்க்கலாம் . இந்தப் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பல தியரிகளை படம் குறித்து தெரிவித்து வருகிறார்கள். ஹாலிவுட்டில் வெளியான பால் (Paul) என்கிற படத்தை அயலான் படத்துடன் ஒப்பிட்டு நிறைய பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
#Paul (2011) / Dir :Greg Mottola 🌟😆
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 6, 2024
வழி தவறி நம்ம பூமிக்கு வந்த ஏலியன ,ஆராய்ச்சி பண்ணனும்னு நினைக்கிற ஒரு கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்தி , திரும்ப அவங்க கிரகத்துக்கே அனுப்ப இரண்டு நண்பர்கள் அந்த ஏலியனோட சேர்ந்து அடிக்கிற லூட்டி தான் இந்தத் திரைப்படம் . ஹாலிவுட்… pic.twitter.com/7dMt6o6zLt
ஹாலிவுட்டி வெளியான பால் படத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு ஒரு ஏலியன் வருகிறது. அதை வைத்து ஆராய்ச்சி செய்யும் கும்பலிடம் இருந்து காப்பாற்றி அதனை மீண்டும் அதன் வீட்டிற்கு அனுப்புவதே இந்தப் படத்தின் கதை. அயலான் படத்தின் கதையும் இதே போல் இருப்பதாக நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அயலான் ?
அயலான் படம் குறித்து படக்குழு தெரிவித்த போது இதுவரை இந்த மாதிரியான ஒரு படம் தமிழில் வெளியானது இல்லை, ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ரவிகுமார் பல இடங்களில் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தப் படம் ஹாலிவுட் படங்களைப் போல் இல்லாமல் இந்தியப் படங்களின் தனித்துவத்தோடு இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
பொங்கல் வெளியீடு
இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக அயலான் திரைப்படத்துடன் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த நிஷன் உள்ளிட்டப் படங்கள் வெளியாக இருக்கின்றன.
மேலும் படிக்க : AyalaanTrailer: ஏலியனின் மிரட்டலுடன் வெளியானது அயலான் படத்தின் டிரெய்லர்!