AyalaanTrailer: ஏலியனின் மிரட்டலுடன் வெளியானது அயலான் படத்தின் டிரெய்லர்!
AyalaanTrailer: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் ஜானரில் உருவான அயலான் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனா பரவலுக்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல் படத்தில் யோமுன்பாக 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படம் பட்ஜெட் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு முடிந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 12-ஆம் தேதி அயலான் படம் ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் வெளிவரும் அயலான் படம் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் படம் ரிலீசாவதை ஒட்டி, அயலான் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், ”வழக்கமாக அமெரிக்காவை தான அழிக்க வருவீங்க. இப்போ ஏன் எங்க நாட்டுக்கு வந்து இருக்கீங்கன்னு” ஏலியனை பார்த்து சிவகார்த்திகேயன் கேட்கும் காட்சிகளும், பூமி மேல் மனிதர்களுக்கு கவலை இருக்காது போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன.