Ethir Neechal June 22 : காணாமல்போன அருண்... குணசேகரனிடம் சிக்கிய ஆதிரை... நேற்றைய எதிர்நீச்சல் அப்டேட்
Ethir Neechal June 22, 2023 : அருண் நிலை என்ன ஆனது? குணசேகரனிடம் வசமாக சிக்கிய ஆதிரை. விறுவிறுப்பான கதைக்களத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் கடந்த சில நாட்களாக உட்சபட்ச பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை ஓடிவிட்ட தகவல் அறிந்து அந்த இடத்தை கண்டுபிடித்த குணசேகரன் ஆதிரை மற்றும் ஜனனி டீம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு விரைகிறார்கள். அடுத்ததாக நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
குணசேகரன், ஞானம், கதிர், ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் ஆகியோர் ஆதிரை இருக்கும் கோயிலுக்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக வேகமாக சேர்கிறார்கள். காரில் செல்லும்போது, குணசேகரன் ”நம்ம வீட்டு பொம்பளைங்க என்ன தைரியம் இருந்தா என்னையே ஏமாற்றி இருப்பார்கள். அவர்கள் என் கையில் சிக்கட்டும். நான் என்ன பண்ண போகிறேன் என்பது எனக்கே தெரியாது. நான் யார் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள போகிறார்கள். என்னை ஏமாற்றிய அனைவரையும் ஒரு வழி செய்யப் போகிறேன்” என கர்ஜித்துக் கொண்டு வருகிறார்.
மறுபக்கம் குணசேகரன் இடத்தை கண்டுபிடித்து வந்து கொண்டு இருக்கிறார் என்பதை ஈஸ்வரி மூலம் அறிந்து கொண்டவர்கள் மிகவும் டென்ஷனாக இருக்கிறார்கள். அருண் வரவில்லை என ஒரு பக்கம் பதற்றம் வேறு. ஆதிரை அண்ணிகளை பார்த்து, ”நான் உங்கள் எல்லாரையும் நம்பி தானே வந்தேன் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இது எல்லாமே உங்களுடைய பிளான் தானே என புரியாமல் பதற்றத்தில் உளறுகிறாள். சக்தியையும் பார்த்து நீயும் இவர்களுக்கு உடந்தை தானே” என கத்துகிறாள். கோபமடைந்த நந்தினி, ”என்ன பேசுற நீ உனக்காக நாங்க எங்களோட வாழ்க்கை, குழந்தை எல்லாரையும் பணயம் வைத்து உனக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்த எங்களையே நீ நம்பாம இப்படி பேசுற. நீ ஒரு நன்றி கெட்டவ” என திட்டுகிறாள் ரேணுகா.
ஆதிரை அண்ணன் வந்து என்னை கொலை செய்வதை காட்டிலும் நானே செத்துவிடுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என்கிறார்கள். அவளை அனைவரும் சமாதானப்படுத்துகிறார்கள். அருணுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவன் அவனோட அண்ணன் கிட்ட கூட மாட்டியிருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? பொறுமையா யோசிப்போம் இரு என சமாதானப்படுத்துகிறார்கள்.
கரிகாலன், குணசேகரனை பார்த்து மாமா கல்யாணம் முடிந்து இருக்காது இல்ல என அழுகிறான். குணசேகரன் அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது அப்படி தாலியே காட்டி இருந்தாலும் அதை அறுத்து எரிந்து உன்னை கட்ட வைக்கிறேன் என்கிறார். இப்போது இருக்கும் பெண்ககள் எல்லாம் தாலியை எங்க மதிக்கிறார்கள். கழட்டி வைச்சுட்டு தான் திரிகிறார்கள். ”தாலிக்கு எல்லாம் இப்போ எங்க மரியாதை இருக்கு. நீ நம்பிக்கையாய் இரு மாப்பிள உன்னை கல்யாண மாப்பிள்ளையாக தான் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன்” என சபதம் செய்கிறார் குணசேகரன். கல்யாணம் மட்டும் நடக்காம போகட்டும் இவனுங்க எல்லாரையும் முடித்துவிடுகிறேன் என ஜான்சி ராணி சொன்னதால் கடுப்பான கதிர், ஞானம், ஜான்சிக்குள் காருக்குள்ளேயே தகராறு நடைபெறுகிறது.
ஜனனி, கௌதமுக்கு போன் செய்து சத்தம் போடுகிறாள். ”உன்னை நம்பி தானே அருணை அனுப்பி வைத்தேன். அவனுக்கு இந்த ஊர் பத்தி எதுவுமே தெரியாது. நீ செய்த உதவிக்கு மிக்க நன்றி. இனிமேல் நானே பார்த்து கொள்கிறேன்” என சொல்லி போனை வைத்து விடுகிறாள். ஆதிரையை வைத்து நடக்க வேண்டிய பூஜைகளை ஐயரிடம் சொல்லி செய்த வைக்கிறார்கள்.
ஒரு வழியாக கோயிலுக்கு வந்து சேர்க்கிறார்கள் குணசேகரன் அண்ட் டீம். ஆதிரையை பிடித்து அடித்து எவ்வளவு தைரியம் உனக்கு. எங்க அந்த அருண். இது எல்லாத்துக்கும் காரணம் அருண்தானே. அவன் எங்க. அவனை எங்க ஒளிச்சு வைச்சு இருக்கீங்க. மரியாதையா சொல்லுங்க என மிரட்டுகிறார்கள். ஆதிரையை அடிக்க வரும் ஜான்சி ராணியை தடுத்த ஜனனி போதும் நிறுத்துங்க! இந்த கல்யாணத்துக்கும் காசி குடும்பத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அருணுக்கு ஆதிரைக்கும் திருமணம் நடத்த பிளான் போட்டது நான் தான் என சொல்கிறாள். இத்துடன் இந்த எபிசோட் முடிவுக்கு வருகிறது.
அருண் நிலை என்ன? ஆதிரை திருமணம் நடக்குமா? குணசேகரன் அடுத்தகட்ட மூவ் என்ன? ஜனனி என்ன செய்ய போகிறாள் இப்படி அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.