இளநரை ஏற்படாமல் தடுக்கும் வழி!

Published by: ஜான்சி ராணி

தலைமுடி ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்.

நம் உடலில் வைட்டமின் பி-5 சரியான அளவில் இருக்க வேண்டும். இதன் சமநிலை மாறும் போது, இளநரை பிரச்சினைகள் வராலம்.

அரிசி, கோதுமை, பயறுகள், பருப்பு வகைகள், முந்திரிப் பருப்பு, பாதாம், பால், , வெண்ணெய், நெய், சீஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக் கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சை நிறக் காய்கறிகளில் வைட்டமின் பி5 நிறைந்துள்ளது.

பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

குறிப்பாக வைட்டமின் சத்துக்களை தவறாமல் சாப்பிடுவது தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும்.

தண்ணீர் குடிப்பது, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றினால் இளநரையை தடுக்க முடியும்.

ஈரல், முட்டை, மீன் ஆகிய உணவுகளும் தலைமுடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.