தெறி... மெர்சல்... மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி?
இயக்குநர் அட்லீயும் விஜய்யும் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனையொட்டி பீஸ்ட் படத்தின் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு வைரலானது.
பீஸ்ட் படத்துக்கு பிறகு தோழா, மகரிஷி ஆகிய படங்களின் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் குடும்ப சென்ட்டிமெண்ட்டாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் வம்சியுடனான படத்துக்கு பிறகு விஜய் யாருடன் இணைவார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது. வம்சி இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு விஜய் அட்லியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீவிஜய்யை வைத்து ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களில் பிகில் தவிர தெறியும், மெர்சலுக்கும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு இருந்தது. பிகில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இயக்குநர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஹிந்தி படம் ஒன்றை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் பட வேலைகளை அட்லீ தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் அட்லீயும் நான்காவது முறையாக இணைவதால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ‛டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!
Simbu Hansika Reunion: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.." ஹன்சிகா பற்றி சிம்பு கொடுத்த ஷாக் நியூஸ்
IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!