Katrina Kaif Wedding | என்னது மெஹந்திக்கே இவ்வளவு செலவா? பிரம்மாண்டத்திற்கு தயாராகும் கத்ரீனா கைஃப்!!
பிரபல நடிகை கத்ரீனா கைஃப்பிற்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க உள்ள நிலையில், அவரின் மெஹந்தி செலவு விவரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப்பும், நடிகர் விக்கி கௌஷலுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமணம் ராஜாஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸஸ் ஃபோர்ட் ஹோட்டலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திருமண நிகழ்வின் போது கத்ரீனா கைஃப் போடும் மெஹந்திக்கு ஆகும் செலவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆமாம்.. கத்ரீனாவுக்கென்றே ஸ்பெஷலாக ஜோத்பூரில் உள்ள பாலி மாவட்டத்தில் இருந்து Sojat மெஹந்தி வரவழைக்கப்பட இருக்கிறதாம். உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த மெஹந்தியை செய்யும் நபர்கள் இதனை திருமண ஜோடிக்கு இலவசமாக வழங்க இருக்கிறார்கள். எந்த வித ரசாயனமும் கலக்கப்படாமல்முழுக்க முழுக்க இயற்கையான முறையில், கைகளால் மட்டுமே இந்த மெஹந்தி உருவாக்கப்படுகிறது. இந்த மெஹந்தி ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
View this post on Instagram
திருமணம் செய்துகொள்வதற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு விக்கி கௌஷல் சரியான திருமண வீட்டைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘சர்தார் உதம்’ திரைப்படத்தின் நடிகர் விக்கி கௌஷல் ஜூஹூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்காக பெரும் தொகையை செலுத்தி உள்ளார். அந்த வீட்டிற்கு சென்றதும் இந்த புதிய ஜோடி விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் அண்டை வீட்டாராக மாறுவார்கள். விராட் மற்றும் அனுஷ்கா ஒரே கட்டிடத்தில் இரண்டு தளங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க:
Watch Video: தியேட்டருக்குள் பட்டாசு.. ராக்கெட்டு.. விபத்தை விலை கொடுத்து வாங்கும் ரசிகர்கள்..! ஷாக் வீடியோ!#viralvideo #SalmanKhan https://t.co/hAwPWFcHoP
— ABP Nadu (@abpnadu) November 28, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

