Simbu Hansika Reunion: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.." ஹன்சிகா பற்றி சிம்பு கொடுத்த ஷாக் நியூஸ்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படம் முதலில் அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்க தயாராக இருந்தது. ஆனால் திடிரென்று படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் படம் வெளியானது.
படம் தற்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிக்கு காத்திருந்த சிம்புவிற்கு இந்தப் படம் அந்த வெற்றியை பெற்று தந்திருக்கிறது. இந்த ஹிட்டை தொடர்ந்து, பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தற்போது சிம்புவின் கால்ஷீட்டை கேட்டு அவரது வீட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
View this post on Instagram
இந்த நிலையில் ஹிந்தியில் ராஷ்மி ராக்கெட்டின் கதையை எழுதிய நந்தா பெரிய சாமி சொன்ன கதை சிம்புவிற்கு பிடித்துப் போக அதற்கு ஒகே சொல்லியிருக்கிறாராம் சிம்பு. சரி இதில் யாரை ஹிரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், சற்று தயக்கத்துடன் இயக்குநர் ஹன்சிகா மோத்வானியின் பெயரை சொல்லியிருக்கிறார். அந்தத் தயக்கத்திற்கு காரணம் சிம்பு எங்கே அவரை ரிஜெக்ட் செய்து விடுவாரோ என்பதுதான். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு, கதைக்கு அவர் தேவைப்பட்டால் கமிட் செய்து கொள்ளுங்கள்.. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறிவிட்டாராம்.. இதனால் வாலு படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு ஹன்சிகா ஜோடி இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, வாலு படத்தில் நடித்த போது, சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருப்பினும் ஹன்சிகாவின் நட்பிற்காக மகா படத்தில் சிம்பு நடித்தார். இந்த நிலையில்அவர்கள் மீண்டும் இணைய இருப்பதாக வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக நயன்தாராவுடனான காதலை முறித்துக்கொண்ட சிம்பு, அதன் பின்னர் அவருடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.