Cooku With Comali 5: குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் விலகல் - என்ன காரணம்?
CWC 5 - Nanjil Vijayan: குக்கு வித் கோமாளி போட்டியாளர் நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு எழுந்துள்ளது
விஜய் டிவியின் ஆல் டைம் ஃபேவரட் ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமான ஒரு ஷோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த நான்கு சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி, தற்போது தனது அடுத்த சீசனுடன் தயாராக காத்திருக்கிறது.
குக்கு வித் கோமாளி 5 (Cooku with Comali)
இதுவரையில் இல்லாத அளவுக்கு குக்கு வித் கோமாளி 5 வது சீசன் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக கலக்கிய செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. வெங்கடேஷ் பட் பதிலாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களான சுனிதா, சரத், குரேஷி, புகழ், ராமர், அன்ஷிதா, கேமி, நாஞ்சில் விஜயன், ஷப்னம், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த சீசனில் பிரபலமான யூடியூபர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வசந்த் வாசி, நடிகை சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
புதிய தயாரிப்பு நிறுவனம்
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை இந்த ஆண்டு பாக்ஸ் ஆஃபிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது.
பரபரப்பை கிளப்பிய நாஞ்சில் விஜயன்
இப்படியான சூழலில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக வந்த நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் நாஞ்சில் விஜயன் விஜய் டிவிக்கு தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாக்ஸ் ஆபிஸ் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின் அந்த பதிவை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு சுற்றில் வெவ்வேறு கெட் அப் போட்டு வந்து ரசிகர்களை சிரிக்கவைத்து வருகிறார் நாஞ்சில் விஜயன். இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரியளவில் அங்கீகாரம் பெற்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நாஞ்சில் விஜயனைப் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.