CWC 4 Wild Card : இந்த வாரம் நடக்கவிருக்கும் வைல்ட் கார்ட் சுற்று..அந்த அதிர்ஷ்டமான 6வது போட்டியாளர் இவரா?
CWC 4 Wild Card : குக் வித் கோமாளி நான்காவது சீசனில் முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட கிஷோர் ராஜ் குமார், காளையன், ராஜ அய்யப்பா, ஷெரின், கஜேஷ், ஆண்ட்ரியன் ஆகியோர் வைல்ட் கார்ட் சுற்றில் பங்கேற்கவுள்ளனர்
ஏராளமான ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி நான்காவது சீசனின் வைல்ட் கார்ட் சுற்று, இந்த வார இறுதியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், வைல்ட் கார்ட் சுற்று நடைபெறும். ஒரு சில காரணங்களால் குறைந்த மதிப்பெண் எடுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படும் நபர்களுக்கு கொடுக்கப்படும் மறுவாய்ப்புதான் இந்த வைல்ட் கார்ட் ரவுண்ட். குக் வித் கோமாளி நான்காவது சீசனில் முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட கிஷோர் ராஜ் குமார், காளையன், ராஜ அய்யப்பா, ஷெரின், கஜேஷ், ஆண்ட்ரியன் ஆகியோர் இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் வைல்ட் கார்ட் சுற்றில் பங்கேற்கவுள்ளனர்.
சில மணிநேரத்திற்கு முன்பு இந்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியானது. இந்த வார நிகழ்ச்சிற்காக முதன்முறையாக பங்கேற்ற 12 குக்குளும் வருகை தந்திருந்தனர். புகழ், தனது தோழியான ஷெரினை மிஸ் பண்ணதாக கூறினார். அதற்கு,‘எனக்கு புகழ் ஸ்ருஷ்டியோட ஜோடியை பார்க்க முடியவில்லை. ஓ மை காட்..’என பதிலளித்தார் ஷெரின். கஜேஷ், ராஜ அய்யாப்பாவை பார்த்து, ‘இவங்க சமைத்ததற்கு, வைல்ட் கார்ட் பக்கம் வர மாட்டங்கனு நினைச்சேன்’ என குரேஷி கேலி செய்தார். முதலில் எலிமினேட் செய்யப்பட்ட கிஷோர் ராஜ் குமார்,‘இங்க இருக்க குக்கே கேட்கிறாங்க.. நீங்க போன சீசனா? இல்ல இந்த சீசனா..அந்த அளவுக்கு மறந்துட்டாங்க.’என வேடிக்கையாக பேசினார். இந்த வாரத்தில் காய், கனி, பூ வைத்து சமைக்க நிபந்தனை வைக்கப்படும் என்று ப்ரோமோவை பார்க்கும் போது தெரிகிறது.
டாப் 5 போட்டியாளர்கள் :
சில வாரங்களுக்கு முன்பு நடந்த டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் விசித்தரா அசத்தலாக சமைத்து முதல் ஃபைனலிஸ்டாக இறுதி சுற்றுக்குள் நேரடியாக நுழைந்தார். பின்னர் கடந்த வாரம் நடந்த அரை இறுதி சுற்றில் அட்வாண்டேஜ் டாஸ்க்கை வென்ற மைம் கோபி, மையின் டாஸ்க்கில் நடுவர்களின் மனதை கவர்ந்து இரண்டாவது ஃபைனலிஸ்ட் ஆனார்.
அவருக்கு பின் ஷிவாங்கி மூன்றாவது ஃபைனலிஸ்டாக அறிவிக்கப்பட்டார். நான்காவது நபர் நீங்கள்தான் என கூறியவுடன், வாடி போன ஸ்ருஷ்டியின் முகத்தில் ஒளி பிரகாசித்தது. பின் மீதம் இருந்த கிஷோர் எலிமினேட் செய்யப்படுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனால் பலரும் சோகமடைந்தனர். வைல்ட் கார்ட் போட்டியில் பார்க்கலாம் என ஆறுதல் கூறினர். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவரையும் இறுதி சுற்றுக்குள் அனுப்பி வைத்தனர் நடுவர்கள். வழக்கமாக இறுதி சுற்றில் 5 நபர்கள் மட்டும்தான் போட்டியிடுவார்கள்.இதுவரை அப்படிதான் நடந்து வந்தது. ஆனால் இம்முறை அதிசயமாக 6 நபர்கள் இறுதி சுற்றில் சமைக்கவுள்ளார்கள். முதல் 5 நபர்கள் யார் யார் என்று அனைவருக்கும் தெரியும். அந்த ஆறாவது நபர் யார் என்று தெரிந்து கொள்ள, வைல்ட் கார்ட் சுற்று ஒளிப்பரப்பாகும் வரை காத்திருக்க வேண்டும்.
6வது போட்டியாளர் ஆண்ட்ரியன்தானா?
இப்போட்டியில் பலர் மனதை கவர்ந்த ப்ரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியன்தான் இறுதிசுற்றுக்குள் நுழைய வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருந்து வர, அவர் ஃவைல்ட் கார்ட் சுற்றில் ஜெயித்து விட்டார் என சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.