’வடிவேலு என்னை கன்னா பின்னானு திட்டினாரு’ இதுக்குத்தான்.. விஜய் கணேஷ் சொன்ன ஷாக் தகவல்..
“ நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றுதான் கணேஷ் என்ற பெயரை , விஜய் கணேஷ் என மாற்றிக்கொண்டேன்.”
வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடியான வக்கீல் வண்டு முருகன் காமெடியில் , “அம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல் இருக்குறது என் கட்சிக்காரரின் தலை “ என்ற வசனம் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் விஜய் கணேஷ். 1985 ஆண்டிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் செந்தில் கணேஷ் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில்தான் சொந்த ஊரான மணமேல் குடியிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். சினிமாவிற்குள் நுழைவதே பெரிய விஷயமாக இருப்பதை அறிந்த அவர், சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துக்கொண்டே சினிமா வாய்ப்பை தேடியிருக்கிறார். அப்படித்தான் பாடலாசிரியர் ஒருவரின் நட்பின் பேரில் வெளிச்சம் திரைப்படத்தில் , கல்லூரி மாணவனாக நடிக்கும் வாய்க்கும் கிடைத்திருக்கிறது. அப்படியாக சினிமே கெரியரை தொடங்கியவர் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் “ நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றுதான் கணேஷ் என்ற பெயரை , விஜய் கணேஷ் என மாற்றிக்கொண்டேன் ஆனால் ஹீரோவாக நடிக்க முடியவில்லை. ஆனால் வி.சேகர் என்னிடம் நீ நல்லா நடிக்கிற ,உடற்பயிற்சி செய் , உன்னை நான் வில்லனாக மாற்றுகிறேன் என்றார். அதன் பிறகு சில படங்களில் வில்லனாக நடித்தேன். ஆனால் வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. பின்னர் ஒய்.ஜி.மகேந்திரன் சீரியல்களில் மேனேஜராக களமிறங்கினேன்.அதுல ஒரு காமெடி கேரக்டர் இருந்தது. நீ போய் மீசை எடுத்துட்டு வா என்றார் ஒய்.ஜி.மகேந்திரன் . மீசை எடுக்க மனமில்லாமல் எடுத்தேன். அதன் பிறகு ஒய்.ஜி.மகேந்திரன் என்னை பார்த்து நீ காமெடி ஃபேஸ், ஏன் மீசை வைத்து மிரட்டிக்கொண்டிருக்கிறாய் என்றார். அந்த காட்சியில் நடித்து முடித்தேன். அந்த சமயத்தில்தான் வடிவேலு , விவேக் இருவருமே போட்டி போட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள்.
நான் முதலில் விவேக் சாருடன் நடித்தேன். அவர் கலரா இருந்ததால நமக்கு செட் ஆகல், அதன் பிறகு வடிவேலுவுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். வடிவேலுவுடன் 62 படங்கள் நடித்திருக்கிறேன்.மதுர படத்துல நான் நடித்த கேரக்டருக்கு யாரெல்லாமோ நடித்தார்கள் செட் ஆகல. அதன் பிறகு வடிவேலு சார் எனக்கு கால் பண்ணாரு. நான் உடனே போனா எல்லாரும் எனக்குதான் வெயிட்டிங்.
அவசர கதியில எல்லாம் நடந்துச்சு.முதல் ஷார்ட் அந்த பொண்ண சைட் அடிக்குற மாதிரி இருக்கும். இங்க்லீஷ்ல பேச சொன்னாங்க இயக்குநர் , டப்பிங்ல பேசுனேன் . அதன் பிறகு வடிவேலு பார்த்துட்டு ஏன் இங்க்லீஷ்ல பேசுனேனு கன்னா பின்னானு திட்டினாரு. அதன் பிறகு மீண்டும் டப்பிங் ஸ்டூடியோ போனேன். அங்க இல்லப்பா அதான் கதைக்கு சரியாக இருக்கும்னு சொன்னாங்க. படம் வெளியானதும் அந்த காமெடியை பார்த்து , வடிவேல் சாரே நல்லா இருக்குடானு பாராட்டுனாரு. “ என பகிர்ந்திருக்கிறார் விஜய் கணேஷ்