Boney Kapoor | கட் அவுட்டுக்கு மட்டுமில்ல.. காருக்கும் பால் அபிஷேகம்.. சிக்கிய போனி! திக்குமுக்காட வைத்த ரசிகர்கள்!
முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் படத்தை கண்டுகளித்தனர்.
கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தான இன்று வெளியானது வலிமை திரைப்படம். அதிகாலை முதலே திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்ப வலிமை திரைப்படத்தை பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் படத்தை கண்டுகளித்தனர்.
பலரும் ட்விட்டரில் படத்தின் ரிவியூ பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் என்றும், செண்டிமெண்ட் காட்சிகளால் சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் இளைஞர்களுக்கான சூப்பர் மெசேஜை சொல்லி படத்தை முடித்திருப்பதாக பதிவிட்டுள்ளனர். அதேபோல படத்தின் நாயகியாக சொல்லப்பட்ட ஹீமா வெறும் நாயகியாக வந்து செல்லாமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிட்டிருப்பதாகவும், படத்தில் ரொமான்ஸ் போன்ற காட்சிகள் இல்லாமல் ஆரம்பம் முதலே விறுவிறுவென செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Boney mams arrived🔥🔥🔥@RohiniSilverScr pic.twitter.com/peKPWnkqHL
— Esakki Muthu Raja (@Esakkimuthura18) February 23, 2022
முன்னதாக, அதிகாலை காட்சியைக் காண சென்னை ரோகிணி தியேட்டருக்கு வலிமை டீம் வந்தது. தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹீமா குரோஷி, நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் வருகை தந்தனர். தியேட்டருக்கு காரில் வந்த போனி கபூருக்கு பாலாபிஷேகம் செய்தனர் அஜித் ரசிகர்கள். பாலாபிஷேகத்தால் தயாரிப்பாளரின் காரே பாலால் நனைந்தது.
.@ActorKartikeya at #FansFortRohini for #ValimaiFDFS #ValimaiAtRohini #Valimai pic.twitter.com/YnHrqfSUNf
— Rohini SilverScreens (@RohiniSilverScr) February 24, 2022
சினிமா நடிகர்களுக்கு பெரிய பெரிய கட் அவுட் வைப்பதையும், பாலாபிஷேகம் செய்வதையும் சம்பந்தப்பட்ட நடிகர்களே விரும்புவதில்லை. ஆனால் அதனை தொடர்ந்து ரசிகர்கள் செய்துவருவது வருந்தத் தக்க ஒன்று என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.