மேலும் அறிய
Advertisement
Vanitha Vijayakumar: வனிதாவை தாக்கிய மர்ம நபர்: மவுனம் கலைத்து பேசிய பிரதீப் ஆண்டனி
Vanitha Vijayakumar: ”வனிதா விஜயகுமாருக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்ற பிரதீப்
Vanitha Vijayakumar: நான் யாருக்கும் எதிராக எதுவும் செய்யவில்லை என்று வனிதா விஜய்குமார் மீதான நடிகர் பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டார். பிரதீப்-க்கு எதிராக ஜோவிகா, பூர்ணிமா, மாயா, ஐஷூ ரெட்கார்டு கொடுத்தனர். பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பேசி வந்தார். பிரதீப்க்கு எதிராக ஜோவிகா ரெட் கார்டு கொடுத்து குறித்தும் வனிதா விஜயகுமார் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு தன்னை பிரதீப் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வனிதா விஜயகுமார் அதிர்ச்சி அளித்தார். முகத்தில் கண்களுக்கு கீழே தாக்கியது போன்று காயப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்து விட்டு காரில் இருந்து இறங்கு நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் எங்கிருந்தோ வந்து, பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கறீங்களா என கூறி தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தன் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடியதாகவும், காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து வலியில் துடித்ததாகவும் வனிதா விஜயகுமார் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாகவும் பிரதீப் ரசிகர்களுக்கு எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு விவாதமாகியுள்ளன.
இந்த சூழலில் வனிதா விஜயகுமாரின் குற்றச்சாட்டிற்கு பிரதீப் மவுனம் களைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வனிதாவுடன் நடந்த வாட்சப் உரையாடலை ஸ்கிரீன் ஷார்ட்டுடன் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். அதில், என்னுடன் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கும் அல்லது வேறு யாருக்கும் எதிராக நான் எதுவும் செய்யவில்லை. வனிதா விஜயகுமாருக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜோவிகா திறமைசாலி. அவளால் வெற்றிப்பெற முடியும். உங்களது உதவி அவளவுக்கு தேவைப்படாது” என குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில மணி நேரங்களில் தனது டிவிட்டர் பதிவை பிரதீப் நீக்கி விட்டு, தேவைப்படும் நேரத்தில் இந்த பிரச்சனைக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு உள்ளேன் என குறிப்பிட்டுளார்.
I also apologize to people who are supporting me, because it might look like I'm letting you all down saying you are capable of doing things like this. I don't think so. But I'm at a point where I have to explain myself and put an end to discussions.
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 26, 2023
Love you all, Nalla irunga🤗
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion