மேலும் அறிய

சியான் விக்ரம் நடிக்க இருக்கும் நான்கு திரைப்படங்கள்!

வீர தீர சூரன் திரைப்படத்தைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாக கதை கேட்டு வந்த விக்ரம் அடுத்தடுத்து 4 திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். மற்ற நடிகர்கள் கமர்சியல் வெற்றிகளை நோக்கி ஓடும் நிலையில் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வருகிறார். இதனாலேயே இவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சறுக்குவதும் உண்டு. விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடிய தவறியதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

அடுத்தடுத்து இரு படங்கள் ட்ராப்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் அடுத்த படம் உருவாக இருந்ததாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து 96 இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் விக்ரம் ஒரு படத்திற்கு கமிட் ஆனார். ஆனால் இந்த இரு படங்களும் அடுத்தடுத்து கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்ரமின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள். 

விக்ரம் நடிக்கும் 4 புதிய படங்கள் 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் தனது அடுத்த 4 படங்கள் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். " சில நேரங்களில் அமைதியாக இருப்பது என்பது தயார்படுத்திக் கொள்வது. இந்த ஆண்டு நான் என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். அந்த வகையில்  நான் பெரிதும் மதிக்கக் கூடிய இயக்குநர்களுடன் நான்கு புதிய படங்களை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். " என்று விக்ரம் பதிவிட்டுள்ளார்

அடுத்தபடியாக விக்ரமின் அடுத்த படத்தை போடி ராஜ்குமார் இயக்கவிருக்கிறார். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருன் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். நயன்தாரா கவின் நடிக்கும் ஹாய் படத்தை இயக்கியுள்ளார். அடுத்தபடியாக இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து கடைசியாக மஹான் படத்தைத் தொடர்ந்து  மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Embed widget