மேலும் அறிய

DMDK Join DMK Alliance | பழம் நழுவி பாலில் விழுந்தது கலைஞர் கேட்டும் வராத DMDK தட்டித்தூக்கிய ஸ்டாலின்

முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. 2016-ல் கலைஞர் எதிர்பார்த்த கூட்டணி 10 வருடங்கள் கழித்து தற்போது சாத்தியமாகியிருக்கிறது.

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகவிட்ட போதும், தேமுதிக மட்டும் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவும் இதோ அறிவிக்கிறோம், அதோ அறிவிக்கிறோம் என்று கூறிவந்தார்.

ஒரு கட்டத்தில் தேமுதிக இரட்டை இலக்கத்தில் சீட்களை எதிர்பார்ப்பதாகவும், திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேசிவருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. அதற்கேற்றாற்போலவே, இரு கூட்டணிகளுமே இன்னும் சில கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு வரவிருப்பதாகவும் கூறிவந்தன.

ஆனால், திமுக அமைச்சார் ராஜகண்ணப்பன் தேமுதிக பற்றி, ``எதாவது ஒரு கட்சிக்கு விசுவாசமா இருக்கணும். ரெண்டு பக்கமும் பேசக்கூடாது. அதெல்லாம் ஒரு கட்சி" என்று பேசியது, திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

அதோடு, மகாசிவராத்திரியன்று ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி வேலுமணியுடன் பிரேமலதா இருந்ததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையப்போவதாக பேசப்பட்டது.

இவ்வாறிருக்க, ராஜ்ய சபா தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே பிரேமலதாவும், சுதீஷும் முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து திமுக - தேமுதிக கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது, அது எப்போது பாலில் விழும் என்று தெரியவில்லை" என்று விஜயகாந்த்தின் வரவை கலைஞர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால், அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் நல கூட்டணியமைத்து படுதோல்வியடைந்தது தேமுதிக.

அதன்பின்னர் 2019-ல் தேசிய ஜனநாயக கூட்டணி, 2021 சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி, 2024 நாடளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக வெறும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது.

இதில், 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யா சபா சீட் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின் அது கொடுக்கப்படவில்லை. இதில் பிரேமலதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் திமுகவுடன் தேமுதிக முதல்முறையாக இணைந்திருக்கிறது.

எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒரு ராஜ்ய சபா சீட்டை வாங்கிவிட பிரேமலதா உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவையில் பூஜ்ஜியமாக இருக்கும் தேமுதிக, இந்தத் தேர்தல் மூலம் சட்டப்பேரவை அல்லது மாநிலங்களவையில் தங்களின் கணக்கைத் தொடங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

2016-ல் கலைஞர் எதிர்பார்த்த கூட்டணி தற்போது 10 வ்ருடங்களுக்குப் ஸ்டாலின் தலைமையில் சாத்தியமாக்கியிருப்பது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

செய்திகள் வீடியோக்கள்

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
ABP Nadu Top 10, 8 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 8 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மாத பட்ஜெட்டுக்கு மரண அடி... அரிசி விலை தாறுமாறு! தீபாவளிக்குள் காத்திருக்கும் அடுத்த ‘ஷாக்’
மாத பட்ஜெட்டுக்கு மரண அடி... அரிசி விலை தாறுமாறு! தீபாவளிக்குள் காத்திருக்கும் அடுத்த ‘ஷாக்’

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Embed widget