மேலும் அறிய

TN WEATHER ALERT: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! இடியுடன் கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்

TN WEATHER ALERT: காற்றழுத்த தாழ்வு பகுதியால் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இன்று (21-02-2026) காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிவுள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. 

தென் மாவட்டங்களில் இடியுடன் கன மழை

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (21-02-2026) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

நாளை (22-02-2026) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதனையடுத்து வருகிற 23-02-2026 முதல் 27-02-2026 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு: 

நாளை (22-02-2026):  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

தமிழக கடலோரப்பகுதிகள்:  

21-02-2026 மற்றும் 22-02-2026: மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:  

21-02-2026 மற்றும் 22-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை - மார்ச் 1-ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை - மார்ச் 1-ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
Anbumani Ramadoss: மின்னும் அன்புமணி ராமதாஸின் 'ஆஷா' திட்டம்: படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு!
Anbumani Ramadoss: மின்னும் அன்புமணி ராமதாஸின் 'ஆஷா' திட்டம்: படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு!
பிரசவ மரணங்களை பாதியாக குறைத்தது எப்படி? சீக்ரெட் உடைக்கும் அன்புமணி ராமதாஸ்!
பிரசவ மரணங்களை பாதியாக குறைத்தது எப்படி? சீக்ரெட் உடைக்கும் அன்புமணி ராமதாஸ்!‌
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget