மேலும் அறிய

UGC: எச்சரிக்கை; இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்; எங்கு முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? யுஜிசி அதிர்ச்சி தகவல்!

UGC Fake Universities: போலி பல்கலைக்கழக எச்சரிக்கை: டெல்லியில் முதலிடம்! தமிழ்நாட்டில் என்ன நிலை? UGC வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் டெல்லி 12 இடங்களோடு முதலிடம் வகிப்பதாக யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதா என்று காணலாம்.

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தும் அமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு. இது யுஜிசி என்றும் அழைக்கப்படுகிறது.

32 போலி கல்வி நிறுவனங்கள் 

யுஜிசி தற்போது நாடு முழுவதும் செயல்படும் அங்கீகாரமற்ற ‘போலி’ பல்கலைக்கழகங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 32 கல்வி நிறுவனங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் தகவல் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுஜிசி வெளியிட்டுள்ள இந்தத் தரவுகளின்படி, தேசியத் தலைநகரான டெல்லியில்தான் அதிகப்படியான போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு மட்டும் மொத்தம் 12 கல்வி நிறுவனங்கள் போலியானவை என்று யுஜிசி சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் எப்படி?

டெல்லியைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 4 போலி பல்கலைக்கழகங்களும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகமும் போலியாகச் செயல்படவில்லை.

கர்நாடகா

சர்வ பாரதிய சிக்ஷா பீடம் (Sarva Bharatiya Shiksha Peeth), தும்கூர்

குளோபல் மனித அமைதி பல்கலைக்கழகம் (Global Human Peace University), பெங்களூரு

கேரளா

தீர்க்கதரிசன மருத்துவத்திற்கான சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் (International Islamic University of Prophetic Medicine -IIUPM), கோழிக்கோடு

செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்

புதுச்சேரி

உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி (Usha Latchumanan College of Education)

ஸ்ரீ போதி உயர் கல்வி நிறுவனம் (Sree Bodhi Academy of Higher Education)

பட்டங்கள் செல்லாது

யுஜிசி சட்டம் 1956-ன் படி, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க முடியும்.

ஆனால், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 32 நிறுவனங்களுக்கும் அத்தகைய அதிகாரம் ஏதுமில்லை. எனவே, இந்த நிறுவனங்களில் படித்துப் பெறப்படும் இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புக்கான சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் செல்லுபடியாகாது.

அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கோ இந்தச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும் சமயத்தில், மாணவர்கள் ஏமாறாமல் இருக்க யுஜிசி இத்தகைய பட்டியலை வெளியிடுவது வழக்கம். பல நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை ஈர்க்கின்றன. எனவே, கல்லூரியில் சேரும் முன்பாக அந்த நிறுவனம் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை www.ugc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு மாணவர்களும் பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget