Parijatham: சிக்கிக் கொண்ட ஸ்ரீஜா அப்பா... ஹனிமூன் போகப்போகும் இசை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜாவை சுபத்ரா மன்னித்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிக்கிக் கொண்ட ஸ்ரீஜா தந்தை:
அதாவது, ஸ்ரீஜா சிந்தாமணியிடம் இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இசை கோர்த்து விடுற மாதிரி பேசினேன் என சொல்கிறாள். அதன் பிறகு ஜெயிலில் இருந்து வெளிய எடுத்தவனை வைத்து டிராயிங் முடிக்க, இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? என இசை யோசிக்கிறாள்.
அவளது மண்டைக்குள் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வேகவேகமாக ஓட அவர் ஒரு இசையமைப்பாளர் என்பது தெரிய வருகிறது. அவருடைய பொண்ணு பேரு கூட ஸ்ரீஜா-னு சொன்ன மாதிரி இருக்கு என்ன சந்தேகப்படுகிறாள். பிறகு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அவரை பேட்டி எடுப்பது போல வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.
உஷாரான ஸ்ரீஜா தந்தை:
ஆனால் ஸ்ரீஜாவின் அப்பா தன்னுடைய மகள் பெயர் ரம்யா என மாற்றி சொல்ல இசை குழப்பம் அடைகிறாள். ஸ்ரீஜாவின் அப்பா பேட்டி முடிந்ததும் வில்லத்தனமாக ஒரு சிரிப்பு சிரிக்க, இசை அனைத்தையும் தெரிந்து கொண்டாள் என அறிந்து கொண்டது தெரிய வருகிறது.
ஹனிமூன் போகும் இசை:
பிறகு ரகுராம் விஷாலிடம் ஏற்காட்டில் நடக்கும் மியூசிக் காம்பிடேஷன் பற்றி சொல்ல விஷால் நான் வரவில்லை என சொல்கிறான். இசை இவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு விஷாலுக்காக அப்ளிகேஷன் எழுதி போடுகிறாள். விஷால் கண்டிப்பா கலந்துப்பார் என வாக்கு கொடுக்கிறான்.
மேலும் சுபத்திராவுக்கும் போட்டி நடக்கும் விஷயமும் விஷால் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிய வருகிறது. அடுத்து எல்லோரும் சாப்பிட உட்கார இசை நானும் விஷாலும் ஹனிமூனுக்காக ஏற்காடு போறோம் என சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























