Bigboss Ultimate : ஒரு பக்கம் பாலா - ரம்யா பாண்டியன் சண்டை.. மறுபக்கம் கண்டுகொள்ளாத சதீஷ்.. வைரல் வீடியோ.!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமாவில் பாலாவும், ரம்யா பாண்டியனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க கே.பி.ஒய். சதீஷ் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுவிப்பாக சென்று கொண்டிருக்கிறது. சிம்பு தொகுப்பாளராக களமிறங்கியது முதல் நிகழ்ச்சியில் பரப்பபுக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாகவே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதனால், சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக கலக்கப்போவது யாரு சதீஷ் களமறிக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக பிக்பாஸ் சீசன் 3ல் கலகலப்பாக வலம் வந்த சாண்டி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கினார்.
இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், ரம்யா பாண்டியனும், பாலாவும் டாஸ்க் குறித்து விவாதித்து, அந்த விவாதம் சண்டையாகியது. இதனால், பாலாவும், ரம்யா பாண்டியனும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கலக்கப்போவது யாரு சதீஷ் அந்த வழியாக இவர்களின் சண்டையை பற்றி ஏதும் கவலைப்படாமல் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டவாறே கடந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சதீஷ் அனைவரையும் தனது காமெடி மூலமாக சிரிக்க வைத்தார். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தனது காமெடியால் ரசிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்த நிகழ்ச்சியில் வந்தது முதல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்றே உள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் சாண்டியை இறக்கி கலகலப்பாக திட்டமிட்டுள்ள பிக்பாஸ், தற்போது பாலாவையும் களமறிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் வெளியேறிவிட்டார். தற்போது புதிய ப்ரோமோவில் சதீஷின் செயல்பாடு அனைவரையும் சிரிக்கவே வைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்